ஒரு கலோரி விளக்குக..
Answers
கலோரி (Calorie) அல்லது கனலி என்பது வெப்பத்திற்கான ஒரு அலகு ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுக்கு முந்தைய காலத்தில் 1824ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் வெப்பத்தின் அளவு ஒரு கனலி ஆகும். தற்போது வெப்பம் அல்லது ஆற்றல் ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான ஜூல் என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும். உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றலுக்கு மட்டும் இன்னும் பல இடங்களில் கலோரி என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு உயிர்வளியுடன் சேர்ந்து எரி சக்தியாக மாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கனலி ஆகும்.செல்லில் உள்ள மைட்டோகாண்டிரியா என்ற பகுதியில் தான் எரிதல் நடைபெறுகிறது. நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கனலி நமக்குத் தேவை. இத்தேவை நம் உடல் பருமன், நாம் செய்யும் வேலை இவற்றைப் பொருத்து அமையும்.