India Languages, asked by tamilhelp, 1 year ago

முதல்‌ உலகப்‌ போருக்கான பல்வேறு காரணங்களைக்‌ கூறுக.

Answers

Answered by lakshyapatel11255
0

Answer:

1914 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி பாஸ்னிய சேர்பிய மாணவனான காவ்ரிலோ பிரின்சிப் என்பவன் ஆஸ்திரோ ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசரான ஆர்ச்டியூக் பிராண்ஸ் பேர்டினண்டை சரயேவோவில் வைத்துச் சுட்டுக் கொன்றான். பிரின்சிப், தெற்கு சிலாவியப் பகுதிகளை ஒன்றிணைத்து அதனை ஆஸ்திரோ ஹங்கேரியில் இருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட இளம் பாஸ்னியா என்னும் அமைப்பின் உறுப்பினன். சரயேவோவில் நடைபெற்ற இக் கொலையைத் தொடர்ந்து மிக வேகமாக நடந்தேறிய நிகழ்வுகளைத் தொடர்ந்து முழு அளவிலான போர் வெடித்தது.[3] ஆஸ்திரோ ஹங்கேரி இக் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சேர்பியாவைக் கோரியது. எனினும், சேர்பியா இதற்குச் செவிசாய்க்கவில்லை எனக் கருதிய ஆஸ்திரோ ஹங்கேரி சேர்பியா மீது போர் தொடுத்தது. ஐரோப்பிய நாடுகளிற் பல கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றுடன் ஒன்று செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் காரணமாகவும், சிக்கலான பன்னாட்டுக் கூட்டணிகள் காரணமாகவும் பெரும்பாலான அந்த நாடுகள் போரில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது.

hope it helps you

please mark as brainliest

Answered by steffiaspinno
0

முதல்‌ உலகப்‌ போருக்கான பல்வேறு காரணங்கள்:

  • ஐரோப்பிய வல்லரசுகளில் 1900ஆம் ஆண்டு ஐந்து அரசுகள் இருந்தன.
  • இதில் இரண்டு அரசுகள் ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தது.
  • ஒரு முகாம் மையநாடுகளான  ஜெர்மனி, ஆஸ்திரிய -  ஹங்கேரி, இத்தாலி  ஆகும்.
  • மற்றொரு முகாமானது பிரான்சும்  ரஷ்யாவும் என அங்கம் வகித்தனர்.
  • பிஸ்மார்க்கின்  வழிகாட்டுதலில் 1882ஆம் ஆண்டு மைய நாடான மூவர்  உடன்படிக்கையை மேற்கொண்டனர்.
  • இதன் மூலம் ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் பரஸ்பரம் உதவிகள்  செய்துகொள்ளும்.
  • 1894இல் மேற்கொண்ட  உடன்படிக்கையின்படி பிரான்ஸ் ரஷ்யா இவ்விரு நாடுகளில்  ஏதாவதொன்று ஜெர்மனியால் தாக்கப்படும்.
  • அவ்வாறு தாக்கப்படும் பட்சத்தில் பரஸ்பரம் துணைநிற்கும் என உறுதிசெய்யப்பட்டது.
  • இதில் இங்கிலாந்து தனிமைப் படுத்தப்பட்டது. தனது தனிதிருத்தலின் பொருட்டு ஜெர்மனியிடம் போர் தொடுத்து தோல்வி அடைந்தது.  
  • இவ்வாறு நாட்டின் பிரித்தல் காரணமாகவும் பகைமைக் காரணமாகவும் முதல் உலகப் போர் நடந்தது.
Similar questions