வைத்தியநாதபுரி முருகன், அணிந்திருக்கும் அணிகலன்களுடன் குழந்தையாகச் செங்கீரை
ஆடிய நயத்தினை விளக்குக.
Answers
- திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன.
- இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வடங்கள் ஆடுகின்றன.
- பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்ட வடிவான சுட்டி பந்தாடுகிறது.
- கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடுகின்றது. உச்சி கொண்டையும் அதில் சுற்றி கட்டப்பட்டுள்ள ஒளி உள்ள முத்துக்கள் ஆடுகிறது.
- சந்தத்துடன் உள்ள பாடலில் உயிர்ப்பு அதிகம் இருக்கும், கேட்பவர்களுக்கு அதன் மீது ஈர்ப்பும் இருக்கும்.
- குழந்தையின் தலை அசைவுகளுக்கும் சந்தம் அமைத்து தருகிறது பிள்ளை தமிழ்.
- ஏற்றம் இறைத்தலுக்கு ஏற்ற சந்தம் கொண்டு இருக்கிறது நாட்டு புற தமிழ்.
Answerer :
நம் நாட்டில், பிறந்த குழந்தைக்கு உச்சிமுதல் உள்ளங்கால்வரை அணிகலன்கள் அணிவித்து அழகு பார்ப்பது இன்றும் நிகழும் ஒரு வழக்கமாகும்.
குமரகுருபரரும், முருகப்பெருமானைக் குழந்தையாக்கி, அவருக்குக் காலணிகளாகிய கிண்கிணியும் சிலம்பும் சூட்டி,
இடுப்பில் அரைஞாணும் அரைமணியும் அரைவடமும் சூட்டி, கழுத்தில் அணிந்த சங்கிலி சிறிய வயிறுவரை தொடுமாறு சூட்டி, நெற்றியில் நெற்றிப்பட்டமும் வட்டச்சுட்டியும் சூட்டி,
காதில் குண்டலமும் குழையும் சூட்டி,
தலையில் சூழிக்கொண்டையும் உச்சிக்கொண்டையும் முத்துகளோடு ஒளி வீசிட, அமைத்து, இருகை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி, தலை நிமிர்த்தி,
முகமசைத்துச் செங்கீரை ஆடுக என்று கூறுகிறார். இக்காட்சியை வடித்துள்ள பாடலில் அமைந்துள்ள சந்தம், தாள இலயத்தோடு, ஒரு குழந்தையை நம் முன் அசைவது போலக் குமரகுருபரர் அமைத்துள்ள பாங்கு, கேட்போர் எவர் உள்ளத்தையும் ஈர்த்துப் பிணைத்துவிடும்.