"சித்தாளின் மனச்சுமைகள்
செங்கற்கள் அறியாது” - இடம்சுட்டிப் பொருள் தருக.
Answers
Answered by
1
"சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது”
- கவிஞர்கள் தொழிலாளர்களின் மனச்சுமையை நினைக்கிறார்கள். இவ்விடம் விளக்கும் பொருள் சித்தாள் போன்ற தொழிலாளர்களின் மனச்சுமையை செங்கற்கள் அறிவதில்லை என்பதாகும்.
- அந்த செங்கற்களை போலவே இருக்கும் கல் மனங்களில் மனிதத்தை புகுத்துகின்றனர் கவிஞர்கள். வானுயர்ந்த கட்டடங்களை பார்த்து நாம் வியக்கிறோம். அதிசயம் என்று நாம் போற்றுகிறோம். ஆனால் அதை உருவாக்க உழைத்தவர்களையும் பாடுபட்டவர்களையும் நாம் நினைப்பதில்லை என்பதே இந்த வரிகள் உணர்த்துகிறது.
- இந்த பாடலை இயற்றியவர் நாகூர் ரூமி ஆவார். இவரது இயற் பெயர் முகம்மது ரஃபி ஆகும். இவர் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.
- இவர் என்பதுகளில் கணையாழி இதழில் எழுத தொடங்கியவர் ஆவார். கவிதை, குறு நாவல், சிறுகதை என பல தளங்களில் இவர் தொடர்ந்து இயங்கி வருபவர்.
Similar questions