India Languages, asked by tamilhelp, 10 months ago

ஒரு தாவரத்தின்‌ சரியான செங்குத்து வளர்ச்சி எவ்வாறு அளவீடு செய்யப்படுகிறது ?

Answers

Answered by rani49035
1

Answer:

I think your question is..

How is the right vertical growth of a plant measured?

if yes

then the answer is

A crescograph is a device for measuring the growth in plants...

hope this will help you

Answered by anjalin
0

                 வளர்ச்சி என்பது உயிரினங்களின் மிகவும் அடிப்படையான, தெளிவாகப் புலப்படும் பண்புகளில் ஒன்றாகும்.

வரையறை

  • ஒர் உயிரினத்தின் எடை, அளவு மற்றும் தன்மை ஆகியவற்றில் ஏற்படும் நிலையான, மாற்றமடையாத அதிகரிப்பே வளர்ச்சி என்பதற்கான வரையறையாகும்.
  • பெரும்பாலான தாவரங்களில், வளர்ச்சி காரணமாக மலர் எடை, புரோட்டோபிளாசத்தின் அளவு ஆகியவை அதிகரிக்கின்றன.
  • உயர் தாவரங்களில், வளர்ச்சி என்பது செல் பிரிதல், செல் பெரிதாதல், வேறுபாடு அடைதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
  • தாவரத்தின் வேர், தண்டு முனைகள் மற்றும் கேம்பியம் ஆகியவற்றில் உள்ள ஆக்குத்திசு செல்கள் தாவரத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளன.

வளர்ச்சி நிலைகள்:

  • தண்டு மற்றும் வேர் நுனியில் உள்ள ஆக்குத்திசுக்களின் செயல்பாட்டினால் தாவரம் நீண்டு உயரமாக வளர்கிறது.
  • தண்டு மற்றும் வேர் பருமனாவதற்கு அவற்றில் உள்ள பக்கவாட்டு ஆக்குத்திசுவின் செயல்பாடே காரணமாகும்.
  • தாவரத்தின் வளர்ச்சி வீதமானது, தொடக்க காலத்தில் மெதுவாக இருப்பதினால், அந்நிலை மெதுநிலை எனவும்,
  • இதனை தொடர்ந்து வளர்ச்சி வீதமானது மிகவிரைவாக, வேகமாக உள்ளது. இந்நிலையானது விரைவு (அ) வேகநிலை எனப்படும்.
  • மூன்றாவது மற்றும் இறுதி நிலையில் வளர்ச்சி வேகம் குறையத் தொடங்குகிறது. உயிரினத்தின் அளவானது எவ்வித மாற்றமும் இல்லாமல் இருக்கும் அளவிற்கு பராமரிக்கப்படுகிறது. இந்நிலை நிலைப்பாடான (அல்லது) உறுதியான சீரான நிலை எனப்படுகின்றது.  

        ஒர் உயிரினத்தின் அளவில் ஏற்படும் வளர்ச்சி (அல்லது) செல்களின் எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பு காலத்திற்கேற்ப உள்ளவாறு ஒரு வரைப்படத்தினை வரையும்போது, S வடிவில் இருக்கும், இவ்விளைவானது, சிக்மாய்டு விளைவு என்றழைக்கப்படுகிறது.

வளர்ச்சியினை அளவீடு செய்யும் முறை:

     தாவரத்தின் நீள்வாட்ட வளர்ச்சியினை சாதாரணமான அளவுகோலை கொண்டு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அளந்து அறிந்து கொள்ளலாம்.

துல்லியமாக அளந்திட லீவரின் ஆக்ஸனோமீட்டர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

இந்த கருவியானது, தாவரத்தின் வளர்ச்சி சிறு அளவில் நீட்சியுறுவதையும் அளவீடு செய்கிறது.

ஒரு தாவரத்தின் சரியான செங்குத்து வளர்ச்சியினை கீழ்கண்டவாறு அளவீடு செய்யப்படுகின்றது.

  உண்மையான வளர்ச்சி:

         =  (குறிமுள் கடந்த தூரம் X கம்பியின் ஆரம்) /  (குறிமுள்ளின் நீளம்)

Similar questions