India Languages, asked by tamilhelp, 11 months ago

கார்போஹைட்ரேட்களுக்கு முதன்மையான ஆதாரமாக விளங்கும்‌
தாவரத்தின்‌ பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.

Answers

Answered by Anonymous
0

Answer:

Not able to understand the the question

Answered by anjalin
0

கார்போஹைட்ரேட்டுகள்

  • சர்க்கரை அல்லது பல்வகை சர்க்கரையிலான மாவுச்சத்தாகும்.
  • இது செரிமான நொதிகள் அல்லது நீர்த்த அமிலங்களால் எளிய சர்க்கரையாக மாற்றப்படுகிறது.  
  • கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பே கார்போஹைட்ரேட்டுகளாகும்.
  • கார்போஹைட்ரேட்டுகள் உடலின் முக்கியமான ஆதார சக்தியாக விளங்குகிறது.
  • இது சர்க்கரை (அல்லது) ஸ்டார்ச் வடிவத்தில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் போன்ற உணவு பொருட்களில் காணப்படுகிறது.

வகை

  • கார்போஹைட்ரேட்டுகள் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. அவை, தனிச்சர்க்கரை மற்றும் பல்கூட்டு சர்க்கரை

கார்போஹைட்ரேட்டுகளின் செயல்பாடுகள்:

  • ஆற்றல் - தானியங்களை அதிக அளவில் உட்கொள்வதால் உடலுக்கு தேவையான சக்தி மாவுச்சத்தின் மூலமாக கிடைக்கப்படுகின்றது.
  • புரதச் செயல்பாட்டை ஊக்குவித்தல்
  • கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்திற்கு உதவுகிறது.
  • நரம்பு மண்டலம்: மைய நரம்பு மண்டலத்தின் ஆற்றல் ஆதரம் குளுக்கோஸாகும். நரம்பு மண்டலத்தின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக கார்போஹைட்ரேட்டுகள் விளங்குகின்றன.

கார்போஹைட்ரேட் மிகுந்து காணப்படும் உணவுப் பொருட்கள்:

  • அரிசி, கோதுமை, கம்பு, கிழங்கு வகைகள், உருளைக் கிழங்கு, மரவள்ளி, சர்க்கரைவள்ளி கிழங்கு, பருப்பு, சர்க்கரை, வெல்லம், தேன், பழங்கள், காய்கறிகள் போன்றவைகளில் மிகுந்து உள்ளது.
  • தானியங்கள், தானிய உணவுகள், கிழங்குகள் போன்றவைகளில் பெரும்பாலும் ஸ்டார்ச், சிக்கலான கார்போஹைட்ரேட்டு உள்ளது.  

கார்போஹைட்ரேட்டுகள் உள்ள தாவரங்களின் பொருளாதார முக்கியத்துவம்:

  • தானியங்கள்:

           தானியங்கள் பின்வரும் காரணங்களால் உணவுத் தாவரங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன

  • அனைத்து வகையான சூழலுக்கு ஏற்ப வெற்றிகாரமாகத் தகவமைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவையாகும்.
  • எளிதில் பயிரிடப்படக் கூடியவை ஆகும்.
  • அதிக அடி கிளைத்தல் செய்யும் தன்மையினனால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் அதிக விளைச்சல் தரக்கூடியவையாகும்.
  • செறிந்த, உலர்ந்த தானியங்களை எவ்விதச் சேதமுமின்றி எளிதில் கையாளவும், கொண்டு செல்லவும், சேமித்து வைக்கக்கூடியவையாகும்.
  • உயர் கலோரி மதிப்புள்ள ஆற்றலை வழங்கக்கூடியவைகளாகும்.

கார்போஹைரேட்கள், புரதங்கள், நார்கள் மற்றும் பல்வகையான வைட்டமின்கள், கனிமங்கள் போன்ற ஊட்டச்சத்துகளை தானியங்கள் தருகின்றன.

அளவின் அடிப்படையில் தானியங்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றது.                 (1) பெருந்தானியங்கள் (2) சிறுதானியங்கள்

பெருந்தானியங்கள்:  

  • நெல்: கார்போஹைட்ரேட்டை வழங்கும் முக்கிய ஆதராமாக அரிசி உள்ளது. அரிசி கலோரி மிகுந்த, எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவாகும்.
  • கோதுமை: கோதுமை உணவானது கார்போஹைட்ரேட் அதிகளவு கொண்ட முக்கிய உணவுப் பொருளாகும்

சிறுதானியங்கள்:

  • கேழ்வரகு
  • சோளம்
  • வரகு  
  • நெல்:

Similar questions