India Languages, asked by tamilhelp, 1 year ago

காலராவின்‌ அறிகுறிகள்‌ யாவை ?

Answers

Answered by AdorableStuti
2

Answer:

change language write in hindi or english

Answered by anjalin
0
  • காலரா நோயானது, விப்ரியோ காலரே பாக்டீரியத்தால் செரிமான பாதையில் ஏற்படும் ஒரு நோய் தொற்றாகும்.
  • அசுத்தப்படுத்தப்பட்ட நீர் மற்றும் உணவுகளின் மூலம் இந்த நோயானது பரவுகின்றது.
  • சிறுகுடல் பகுதியில் என்டிரோ டாக்சின் நச்சுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றது.

அறிகுறிகள்:

  • வாந்தி, கஞ்சித் தண்ணீர் போன்று கடுமையான வயிற்றுப் போக்கு மற்றும் கடுமையான நீரிழப்பும், தாது உப்புகளிழப்பும், இரத்த அமிலத் தன்மை அதிகரிப்பும் மற்றும் இரத்தத்தின் அடர்த்தி அதிகரிப்பும் ஏற்படும்.
  • குழந்தைகளிடம் காணும் சில முக்கியமான அறிகுறிகள், நினைவு பிறழ்தல், வலிப்பு நோய்கள் மற்றும் கோமா (ஆழ்மயக்கம்) ஆகியவை ஆகும்.

நோய் ஏற்பட காரணமான காரணிகள்

  • சுகாதாரமற்ற சூழ்நிலைகள்
  • வயிற்றில் அமிலத்தின் அளவானது குறைவது அல்லது முழுமையாக இல்லாமல் இருப்பது.
  • பாதிக்கப்பட்டவர்களுடன் இருத்தல்  
  • பச்சையான அல்லது சமைப்படாத உணவுகளை உண்பது

நோய் கண்டறியும் முறைகள்:

  • இரத்த பரிசோதனைகள்
  • இரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவினை கண்டறிதல்
  • மலத்தின் மாதிரிகள்
  • சிறுநீரக செயல்பாட்டின் சோதனைகள்

நோய்க்கான சிகிச்சை முறைகள்:

  • வாய்வழியாக நீர்க்கரைசலை அளித்து தீர்வு காணுதல்
  • நரம்பு வழியாக செலுத்தப்படும் திரவங்கள்
  • ஆண்டிபயாடிக் நுண்ணுயிர் எதிர்ப்பொருளினை உடலில் செலுத்துதல்
  • துத்தநாகம் மிகுதியாக உள்ள உணவுகள்
  • தடுப்பூசிகள் போடுதல் ஆகியவை காலரா நோயின் சிகிச்சை முறைகளாகும்.

Similar questions