India Languages, asked by tamilhelp, 11 months ago

"ஹார்டி வீன்பெர்க்‌ சமன்பாடு ஒரு பெரிய உயிரினத்‌ தொகை கூட்டத்திற்கே
பொருந்தும்‌. இவ்விதியின்‌ கருத்தியல்‌ சூழ்நிலைகளை எழுதுக."

Answers

Answered by Racerbike
0

VANAKKAM!!!!!!!

NAN TAMIL THAN....

BUT, UNGA QUESTION ENAKKU PURIYALA....

Answered by anjalin
0
  • ஒன்றோடொன்று இணைந்து செயல்புரியும் உயிரிகளின் ஒர் கூட்டம் உயிரினத் தொகை எனப்படும்.
  • பால்முறை இனப்பெருக்கத் தொடர்புடைய அக்கூட்டம் மரபிய உயிரினத் தொகை அல்லது மென்லிடிய உயிரினத் தொகை என்றழைக்கப்படுகிறது.  
  • ஒர் குறிப்பிட்ட குறுகிய இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்திருந்து தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்யும் கூட்டம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
  • இக்கூட்டத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் மரப்பணுக்களும் ஒட்டுமொத்தமாக ஜீன் குழுமம் என்றழைக்கப்டுகின்றது.
  • ஒர் மரப்பணுவின் தொடர் தோன்றுதல் ஜீன் குழுமத்தின் ஒர் குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஜீன்களுக்கும் அவற்றின் அல்லீல்களுக்கும் உள்ள எண்ணிக்கை தொடர்பை குறிப்பதாகும்.  
  • ஒர் குறிப்பிட்ட ஜீன் ‘A” யின் தொடர் தோன்றுதல் ‘P” என்றும் ஜீன் ‘a” யின் விகிதம் ‘q” என்றும் கொண்டால் ஜீன் சமன்பாட்டில் ஜீன்களின் மொத்த தோன்றுதலை ‘L’  

                எனவே, P+q = 1 அல்லது p=1-q; q=1-p

  • 1908 -ம் ஆண்டு ஜி.எம்.ஹார்டி மற்றும் டபிள்யூ.ஹார்டிவீன்பெர்க் ஆகியோர் உயிரினத் தொகை மரபியலை ஒர் விதியின் வாயிலாக விளக்கியுள்ளனர்.
  • இவ்விதியானது, ஹர்டிவீன்பெர்க் விதி என்றழைக்கப்படுகிறது.
  • இவ்விதியானது, உயிரினத்தொகை மரபியலுக்கும், நவீனப் பரிணாம கோட்பாடுகளுக்கும் அடிப்படையாகிறது.
  • ஒர் பெரிய, தாராள இனப்பெருக்கப் பரிமாற்றம் உள்ள உயரினத் தொகையில் பலவகை ஜீன்களின் சார்பு தொடர் தோன்றல் எண் அடுத்தடுத்த தலைமுறையிலும் திடீர்மாற்றம், தேர்வு, புதிய ஜீன்களின் வரவு ஆகியவை இல்லையெனில் மாறாதிருக்கும் என்பது தான் ஹார்டிவீன்பெர்க் விதியாகும்.
  • இவ்விதியானது, பரிணாம மாற்றம் இல்லாத உயிரினத் தொகையின் கருத்தியல் திட்டமாகிறது.
  • இயல்பான மெண்டலிய தொடர் தோன்றுதல் மேற்குறிப்பிட்ட காரணிகள் இல்லையெனில் மட்டுமே ஏற்படும்.
  • அக்காரணிகள் செயல்பட்டால் மரபணு தொடர்தோன்றுதல் மாறுதல் பெறுவதினால் வேறுபாடுகள் தோன்றுகிறது. வேறுபாடுகள் பரிணாமம் நடைபெற வழிவகுக்கும்.

Similar questions