India Languages, asked by tamilhelp, 11 months ago

எலக்ட்ரோ கார்டியோகிராம்‌ பற்றி கட்டுரை வரைக.

Answers

Answered by anjalin
0

எலக்ட்ரோகார்டியோகிராம் (ஈ.சி.ஜி)

  • இதயச் சுழற்சியின் போது, இதயத்தில் ஏற்படும் மின்திறன் மாற்றங்களின் ஆவணம் ஆகும்.  
  • இது, தோலின் மீது வைக்கப்படும் மின்முனைகள் வழியாக குறிப்பிட்ட கால அளவில் இதயத்தின் மின்சாரச் செயல்பாட்டை வெளிப்புறமாக கைப்பற்றி பதிவு செய்யும் உள்மார்பக மேல்விளக்கமாகும்.
  • ஈ.சி.ஜி-யை பதிவு செய்ய உதவும் உபகரணம் எலக்ட்ரோகார்டியோகிராம் ஆகும்.
  • 1887-ம் ஆண்டு முதன் முதலில் இதயத்தின் மின் ஆற்றலை வாலர் என்பவர் பதிவு செய்தார். எய்ந்தோவனின் என்ற அறிஞர், உறுதியான கால்வனோமீட்டர் கொண்டு ஈ.சி.ஜி-யை பதவி செய்யலாம் என்பதனை ஆய்வின் மூலமாக கண்டறிந்தார்.
  • இந்த கண்டுபிடிப்பிற்காக 1924-ம் ஆண்டு எய்ந்தோவனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • ஒரு சாதாரண ஈ.சி.ஜி யில் ஐந்து அலைகள் காணப்படுகின்றன.
  • அவை இடமிருந்து வலமாக P, Q, R, S மற்றும் T என்ற எழுத்துகளால் குறிக்கப்படும்.

P அலை:  

  • இது ஆரிக்கிள்களில் தோன்றும் ஏட்ரிய அலையாகும்.
  • இந்த அலைகளானது மின்னாற்றல் திசைமாற்றம், ஆரிக்கிள்களில் பரவுவதால் நடைபெறுகிறது.
  • இந்த அலைகளின் கால அளவானது 0.1 வினாடி மற்றும் இவ்வலைகளின் வீச்சானது கிட்டத்தட்ட 0.1 முதல் 0.3 மீ வோல்ட் ஆகும்.
  • P அலை உச்சக்கட்டத்தை அடையும் போது இதயத்தூண்டு விசை சைனு-ஆரிக்குலார் கதுப்பை அடைகிறது. ஆரிக்கிள் செயல்பாட்டைக் கண்டறிய P அலைகள் உதவுகின்றன.

Q, R  மற்றும் S அலைகள்:

  • Q அலைகள் என்புத கீழ்நோக்கிய சிறிய எதிர்மறைவு வளைவாகும். இவ்வலைகள் பெரும்பாலும் தெளிவாகப் புலப்படாது. இது ஆரிக்கிள் இடைச்சுவரில் நடைபெறும் மின்னாற்றல் திசை மாற்றத்தை குறிக்கும்.
  • R அலை என்பது ஒரு பெரிய மேல்நோக்கிய நேர்மறை அலையாகும். P அலை
  • S அலை என்பது சிறிய எதிர்மறை அலையாகும். R மற்றும் S அலைகள் வெண்ட்ரிக்கிள் திசையில் நடைபெறும் மின்னாற்றல் திசை மாற்றத்தைக் குறிக்கும்.  
  • Q, R, S அலை கூட்டின் காலஅளவு 0.08 வினாடி, அது பெரும்பாலும் 0.1 வினாடிக்குள் இருக்கும்.
  • R அலையின் சராசரி வீச்சு கிட்டத்தட்ட 1 மிவோல்ட் ஆகும்.

T அலை:  

  • இது வெண்ட்ரிக்களில் நடைபெறும் மின்னாற்றல் மீள்வைக் குறிக்கும்.
  • இது ஒரு அகலமான அலை, அதன் கால அளவு 0.27 வினாடி, வீச்சு 0.15 முதல் 0.5 மிவோல்ட் ஆகும்.

Similar questions