தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத்
தொகுத்து எழுதுக.
Answers
Answer:
கவிஞர் உள்ளத்தில் எழும் உணர்ச்சி எனும் வேருக்கு உணவாய் தமிழ் உள்ளதாகக் கூறுகிறார்.
Explanation:
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக. Answer: இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார். செம்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.
முன்பு ஒருநாள் பாண்டிய மன்னர்தம் மனத்தில் இத்தகைய வெறி உணர்வு தோன்றியதால் உருவானதுதான் முத்தமிழ் வளர்க்கும் மூன்று சங்கம். தமிழ் தவழும் தமிழ்நாடே! நீ பாரி முதல் கடையெழு வள்ளல்களையும், புரவலர்களையும் இவ்வுலகிற்குக் கொடுத்தாய்.
மீண்டும் அந்தப் பழமைக்காலம் தமிழ்ப்படைப்பில், தமிழ்ப் பண்பாட்டில் நிலைக்க வேண்டும். அதைத் தமிழ்க்குயில் இன்னிசையோடு கூவவேண்டும்.
கூண்டினை உடைத்து எழும் சிங்கம் போலக் குளிர் பொதிகையில் தவழும் தென்தமிழே தமிழன் புதுமெருகுடன், தமிழ் புது வேகத்துடன் துள்ளித்திரிகிறது எனப் பாடத்தமிழே வா! வா! எனக் கவிஞர் அழைக்கிறார்.
“இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” என்றார் தமிழ்விடு தூது ஆசிரியர். இத்தகைய அமிழ்தினும் இனிய தமிழ் அறிவியல் தகவல் தொழில் நுட்பத்திற்கேற்ப புதிய வரவுகளைத் தமிழ் உலகுக்குத் தரவேண்டும், என்பதே கவிஞரின் அவா! அவர்தம் அவாவினை இளந்தமிழே! என்ற இனிய தலைப்பில் கவிதை வரிகளாய்க் கனிச் சாறாய்க் கொடுத்துள்ளார்.
For more related question : https://brainly.in/question/15917916
#SPJ1