இம்யுனேகுளோபுலிளின் அமைப்பை தகுந்த
படத்துடன் விளக்கு
Answers
Answered by
4
Answer:
can't understand this language
Answered by
1
இம்யுனேகுளோபுலிளின் அமைப்பு
- இம்யுனோகுளோபில் என்ற எதிர்ப்பொருள் Y-வடிவ அமைப்புடன் நான்கு பாலிபெப்டைடு சங்கிலிகளை கொண்டு உள்ளது.
- இந்த நான்கு சங்கிலிகளில் ஒத்த அமைப்புடைய, நீளம் குறைவான, இலகுவான அல்லது லேசான இரண்டு சங்கிலிகள் L-சங்கிலிகள் எனவும், நீளம் அதிகமான, கனமாக இரண்டு சங்கிலிகள் H-சங்கிலிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- L-சங்கிலிகளின் எடை ஏறத்தாழ 25,000 டால்டன் மூலக்கூறு (ஏறத்தாழ 214 அமினோ அமிலம்) ஆகும்.
- H-சங்கிலிகளின் எடை ஏறத்தாழ 50,000 டால்டன் மூலக்கூறு (ஏறத்தாழ 450 அமினோ அமிலம்) ஆகும். இந்த நான்கு சங்கிலிகளும் டை-சல்பைடு பிணைப்பால் இணைக்கப்பட்டு உள்ளன.
- ஒவ்வொரு L-சங்கிலியும், ஒரு H-சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
- இரண்டு H-சங்கிலிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு Y-வடிவ அமைப்பை உருவாக்குகிறது.
- ஒவ்வொரு சங்கிலியும்இரண்டு முனைகளைக் கொண்டுள்ளது.
- ஒன்று C-முனை மற்றொன்று N-முனை அல்லது அமினோ முனையாகும்.
Similar questions