India Languages, asked by tamilhelp, 1 year ago

விருந்தோம்பல் என்றால் என்ன?

Answers

Answered by anjalin
12

விருந்தோம்பல்

  • முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.
  • அவர்களை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண  உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல்.
  • விருந்தே புதுமை’  என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

  • தயிர் பிசைந்த சோற்றை உருட்டி அனைவருக்கும் கையில் ஓர் உருண்டை கொடுத்து, உருண்டையின் நடுவில் வைத்த குழியில் புளிக்குழம்பு இட்டு உண்ணச் சொன்ன  அன்னையின் அன்பில்  தொடங்குகிறது அனைவருடனான பகிர்ந்துண்ணல்.
  • சிறுவயதில்  மகனுடனோ மகளுடனோ வரும் நண்பர்களுக்கும் சேர்த்து அம்மா தரும் சிற்றுண்டியில் தொடங்குகிறது, தமிழரின் விருந்து போற்றுதல்.
  • தமிழர் மரபில்  உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது.
Similar questions