பெல்டியர் குணகம் வரையறு.
Answers
Answered by
0
பெல்டியர் விளைவு
- வெப்ப மின்னிரட்டையுடன் கூடிய மின் சுற்றில் மின்னோட்டத்தை செலுத்தும்போது, ஒரு சந்தியில் வெப்பம் வெளிப்படுதலும் மற்றொரு சந்தியில் வெப்பம் உட்கவர்தலும் நடைபெறும். இவ்விளைவு பெல்டியர் விளைவு எனப்படும்.
- இதனை பெல்டியர் 1834 ல் கண்டறிந்தார்.
எடுத்துக்காட்டு:
- Cu-Fe வெப்ப மின்னிரட்டையில் A மற்றும் B புள்ளி சமவெப்பநிலையில் உள்ளன.
- மின்கல அடுக்கிலிருந்து மின்னோட்டமானது வெப்பமின்னிரட்டை வழியே பாய்கிறது.
- A சந்தியில் மின்னோட்டம் தாமிரத்திலிருந்து இரும்பிற்கு பாய்கிறது.
- அங்கு வெப்பம் உட்கவரப்பட்டு சந்தி A குளிர்வடைகிறது.
- சந்தி B ல் மின்னோட்டம் இரும்பிலிருந்து தாமிரத்திற்கு பாய்வதால் அங்கு வெப்பம் வெளிப்பட்டு சந்தி B வெப்பமடைகிறது.
- மின்னோட்டத்தின் திசையை மாற்றினால், A சந்தி வெப்பமடையும், B சந்தி குளிர்வடையும். எனவே பெல்டியர் விளைவு
- ஒரு மீள் விளைவு ஆகும்.
Similar questions