இராமன் பரிவுடன் சவரியிடம் வினவியதும் அதற்குச் சவரி உரைத்த மறுமொழியும் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
இராமன் பரிவுடன் சவரியிடம் வினவியது
- இவனுக்கு முன்னே இப்படியொருவர் இருந்தார் என்று பிறிதொருவரைக் காட்ட இயலாத நிலையிலுள்ள முதற்பொருளாகிய இராமன்,சவரியிடம் இனிதாகப் பேசினான். தன்னையே நினைத்துத் தவமிருந்த சவரியிடம்,
”இவ்வளவுகாலம் நீ துன்பம் ஏதுமின்றி
நலமுடன் இருந்தாய் அல்லவா?"
என்று பரிவுடன் கேட்டான்.
சவரி உரைத்த மறுமொழி
- அப்போது சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போல க் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால்) “ என் பொய்யான
"உலகப்பற்று அழிந்தது ; அளவற்ற
காலம் நான் மேற்கொண்டிருந்த
தவம் பலித்தது ;என் பிறவி ஒழிந்தது “
என்று கூறினாள்.
- வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.
Similar questions