India Languages, asked by tamilhelp, 11 months ago

சென்னையின் தொன்மை குறித்து மதரஸாப்பட்டினம்
உரைப்பன யாவை?

Answers

Answered by anjalin
0
  • இன்று சென்னை என்று அழைக்கப்படும் பகுதியும் அதன் சுற்றுபகுதிகளும்  வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதன் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டுள்ளன.
  • சென்னைக்கு அருகேயுள்ள குடியம், அத்திரமபாக்கம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப்பணி, அப்பகுதியின் மனித நாகரிகத்தின் பழமையை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என நிறுவுகிறது.
  • அங்கு ஓடக்கூடிய கொற்றலையாற்றுப் படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்.
  • பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல் கோடரி, இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
  • மேலும் கூடுவாஞ்சேரி ,பல்லாவரம், புழல் போன்ற பகுதிகளில் இன்றும் கிடைக்கும் தொல்பழங்கால மானுட எச்சங்கள் இப்ப குதியின் பழமையை நமக்கு உணர்த்துகின்றன.
  • பல்லாவரத்தில் உள்ள பல்லவர் குடைவரை, முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது. இங்குள்ள கல்வெட்டைச்  சென்னையில் கிடைத்தவற்றுள் பழமையான கல்வெட்டு எனலாம்.
Similar questions