India Languages, asked by tamilhelp, 11 months ago

பின்வரும் பத்தியைப் படித்து அதன் அடியிற் காணும் வினாக்களுக்கு விடையளி.
அண்டார்ட்டிகா தவிர உலகின் எல்லா இடங்களிலும் எலிகள் வாழ்கின்றன. சில இனங்கள் தரையிலும், சில பூமிக்கடியில் வளைகளிலும் மற்றும் சில மரங்களிலும் வாழ்கின்றன. சில எலிகள் குளிர்காலம் முழுவதும்தூங்காமல் வாழ்கின்றன. எலிகள் சுண்டெலியைவிடப் பெரியவை. எலிகளின் கால்களில் ஐந்து விரல்கள் உண்டு. உடலில் முடி நிறைந்திருக்கும், மீசை உண்டு, கடினமான வால் உள்ளது. சுமாரான பார்வைத்திறன் உண்டு. மரம், பிளாஸ்டிக், அலுமினியம், காரீயம், தாமிரம் போன்றவற்றைக் கடிக்கும் அளவுக்குக் கூர்மையான பற்கள் உண்டு. தான் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு எலிகளின் நிறமும் எடையும் வேறுபடும். எலிகள் தினந்தோறும் அவற்றின் எடையில் ஐந்து முதல்
இருபது சதவீதம் வரை சாப்பிடுகின்றன
எலிகளுக்கு வலிமையான தாடைத் தசை உள்ளது. ஒரு ஜோடி வெட்டும் பற்கள் உள்ளன. வருடத்குற்கு 12 சென்டிமீட்டர் வீதம் வாழ்நாள் முழுதும் அவற்றின் பற்கள் வளர்த்துக்கொண்டே இருக்கும். பற்களின் மேல் உள்ள பற்பூச்சு வலிமையானது. அதனால்தான் உலோகம் போன்ற கடினப் பொருள்களையும் எலியால் எளிதாகக் கடிக்க முடிகிறது.
உலூன் பல பகுதிகளில் எலிகளைச் சாப்பிடுகிறார்கள். பெருச்சாளியில் புரதச்சத்து இருப்பதால் விரும்பி உண்கிறார்கள். வயல் பக்கம் கடைக்கும் வெள்ளை எலி அநேக மக்களால் உண்ணப்படுகிறது. எலியை உணவுக்காக வியாபாரரீதியாக வளர்கின்றனர். கானா, பிலிப்பைன்ஸ், வியத்நாம், தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் எலியை உண்கின்றனர்.
வளர்ப்பு பிராணிகளுக்கும் எலி உணவாகக் கொடுக்கப்படுகிறது.
வினா
எலிகள் எங்கு வாழ்கின்றன?

Answers

Answered by anjalin
0

எலிகள் வாழும் இடங்கள்

  • அன்டார்ட்டிகா தவிர உலகின் எல்ல இடங்களிலும் எலிகள் வாழ்கின்றன.

வகை

எலிகளில் பல வகைகள் உண்டு.

  • சுண்டெலி,
  • வெள்ளெலி,
  • மூஞ்சூறு,
  • கல்லெலி,
  • சரெவெலி,
  • பெருச்சாளி

             என எலிகளில் பல வகைகள் உள்ளன.  

சுண்டெலி

  • எலிகளில் மிகவும் சிறியது சுண்டெலி.
  • இது கொல்லைகளின் (புன்செய் நிலங்களை கொல்லை என அழைப்பது வழக்கம்)
  • வரப்புகளில் ஒன்று முதல் இரண்டு அடி நீளத்தில் வளை தோண்டி வாழ்பவை.
  • புன்செய் தானியங்களை உண்டு வாழ்பவை.  

வெள்ளெலி

  • புன்செய் நிலங்களில் வரப்புகள் புதர்கள், வேலியோரங்கள், மரத்தடி ஆகிய இடங்களில் வளை தோண்டி வாழ்பவை.
  • பல அடி தூரம் இவை வளைகளைத் தோண்டுகின்றன.  

மூஞ்சூறு

  • இந்த எலி வீட்டில் வாழ்பவை.  

கல்லெலி

  • கொல்லையின் வரப்புகளில் வளை தோண்டி வாழும்.
  • இந்த எலி வெள்ளெலி போல் வளையை மண்ணால் மூடாமல் சிறு சிறு கற்களால் மூடி வைத்திருக்கும்.  

சரவெலி

  • இந்த எலி பனை மரம், தென்னை மரம், ஈச்ச மரம் போன்ற மரங்களின் உச்சியில் இலைகளாலும் நார்களாலும் கூடுகட்டி வாழும்.
  • இரவில் இரை தேட மரத்தை விட்டு கீழே இறங்கும்.
  • பகலில் மரத்திலிலேயே இருக்கும்.  

பெருச்சாளி

  • வேலியோரங்கள் கற்குவியல், புதர்கள், வைக்கோல்போர் போன்ற இடங்களில் வளை தோண்டி வாழும்.

Similar questions