India Languages, asked by sohail178, 11 months ago

_________ என்பது பிரிவு அல்லது
வகை என்ற பொருளில் செய்யுள்களில்
பயன்படுத்தப்பட்ட கருப்பொருள்;
மேலும், இது ஒரு வாழ்விடத்தை
அதன் தனித்தன்மை வாய்ந்த
இயற்கைக்கூறுகளுடன் குறிப்பதாகவும்
உள்ளது.

Answers

Answered by anjalin
0

திணை

  • தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் திணை என்ற கருத்து விவரிக்கப்பட்டுள்ளது.
  • திணை என்பது  குறிப்பிட்ட இயற்கை நிலவமைப்பையும், அதன் வாழ்வியல் முறைகளையும் குறிப்பதாகும்.  
  • சங்கச் செய்யுள்கள் திணை அடிப்படையிலேயே  தொகுக்கப்பட்டுள்ளன.
  • மனித வாழ்க்கையையும், இயற்கையோடு மனிதர்கள் கொண்டிருந்த நெருக்கமான உறவையும் அவை படம் பிடித்துக் காட்டுகின்றன.
  • சங்க காலச் செய்யுள்களை பொருண்மை அடிப்படையில் பொதுவாக அகத்திணைப்  பாடல்கள் என்றும் புறத்திணைப் பாடல்கள்  என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  
  • அகத்திணை என்பது காதல் வாழ்வையும்  குடும்ப வாழ்வையும் குறிக்கும்.
  • புறத்திணை  என்பது வாழ்வின் பிற அம்சங்களையும்  குறிப்பாக, போர், வீரம் முதலிய பொருள்களைப் பேசுகிறது.
Similar questions