மகாவீரர்களின் போதனைகளால்
ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.
அ) தனநந்தர் ஆ) சந்திரகுப்த ர்
இ) பிம்பிசாரர் ஈ) சிசுநாகர்
Answers
Answered by
1
பிம்பிசாரர்
- இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகவும் சாதகமான இடமான கங்கைச் சமவெளியைக் கைப்பற்றுவதற்கு நடந்த போராட்டத்தில் மகதம் வெற்றி பெற்றது.
- அதன் முதல் முக்கியமான அரசர் பிம்பிசாரர். அவர் வைசாலியின் செல்வாக்கு மிக்க லிச்சாவி குலத்துடனும் கோசல அரச குடும்பத்துடனும் திருமண உறவுகள் வைத்து, வங்கத்தைக் கைப்பற்றினார் (இப்போதைய மேற்கு வங்கம்).
- இந்த நடவடிக்கை அவர் கங்கைச் சமவெளியை அடைய உதவியது.
- ஒரு விரிவான நிர்வாக முறையை ஏற்படுத்துவதில் பிம்பிசாரர் வெற்றி பெற்றார்.
- அவரது நிர்வாக முறையில் கிராமம் தான் அடிப்படை அலகு.
- கிராமங்களைத் தவிர வயல்கள், மேய்ச்சல் நிலங்கள், தரிசுநிலங்கள், காடுகள் (ஆரண்யம், கேந்ரம், வனம்) ஆகியவையும் இருந்தன.
- ஒவ்வொரு கிராமும் கிராமணி என்ற கிராமத்தலைவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தது.
Similar questions