. இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சிகளை விளக்குக.
Answers
Answered by
0
இடைக்கால இந்தியாவில் ஏற்பட்ட வணிக வளர்ச்சி:
- இந்தியா விரிவான சந்தையைப் பெற்றிருந்தது. கிராமமே பொருள் உற்பத்தியின் அடிப்படை பிழைப்புக்கான பொருளாதார நிலையில் செலவாணி என்பது பண்டமாற்று,உற்பத்தியாளர்கள் உபரியை உற்பத்தி செய்து அவரே வாழ்விடப்பகுதி வாரச் சந்தையில் விற்பனை செய்தல், உற்பத்தியாளரிடமிருந்து விற்பனை செய்வதை இடைத்தரகர்கள் மேற்கொள்ளுதல்.
- கடைகளோடும் கடைவீதிகளோடும் முக்கிய வணிக மையங்களாகச் செயல்பட்ட நகரங்கள் நாட்டின் பிறபகுதிகளோடு சாலைகளால் இணைக்கப்பட்டதால் பிராந்திய வணிகத்தின் இடைநிலை முனையங்களாகச் செயல்பட்டன.
- இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதி வணிகத்தில் சிறுகப்பல்கள், படகுகள் , பயன்படுத்தப்பட்டன, முக்கிய துறைமுகங்கள் (சூரத், மசூலிப்பட்டினம், கோழிக்கோடு)
- இந்தியப் பெருங்கடலின் குறுக்கே கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை கடல் வணிகம் செழித்தோங்கியது.
- நிலவியல் ரீதியாகஇந்தியப் பெருங்கடலின் நடுவே இந்தியா அமைந்திருப்பது இப்பிராந்திய வணிகத்தில் ஒரு சிறப்பு.
ஏற்றுமதிப் பொருட்கள் :
- துணி, மிளகு,நவரத்தினக்கற்கள்,இந்திய வைரம், இரும்பு,எஃகு.
இறக்குமதிப் பொருட்கள்
- பட்டு, செராமிக் ஓடுகள், தங்கம், நறுமணப்பொருட்கள், நறுமண மரங்கள், கற்பூரம்..
Answered by
2
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
10 months ago
English,
10 months ago
Hindi,
1 year ago
English,
1 year ago