Social Sciences, asked by rocky1254, 11 months ago

‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்.

Answers

Answered by steffiaspinno
0

ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்.

  • லியானர்டோ டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோ ரஃபேல் போன்ற மாபெரும் கலைஞர்கள்  கலையின் களத்தில் மிகச்சிறந்த நுட்பமான கலைத் தன்மை கொண்ட படைப்புகளை உருவாக்கினர்.

லியானர்டோ டாவின்சி (கி.பி. 1452 - கி.பி 1519),

  • பல்துறைகளில் திறன் மிகுந்த ஒரு மேதையாகவும் திகழ்ந்தார். இவர் ஓர் ஓவியராகவும்,  சிற்பியாகவும், கட்டட வடிவமைப்பாளராகவும், ராணுவப் பொறியியலாளராகவும், உடற்கூறியல் வல்லுநர் மற்றும் கவிஞராகவும் இருந்தார்.
  • "மோனாலிசா" (La Giaconda), "கடைசி இரவு விருந்து", "பாறைகளின் மீதொரு கன்னிப் பெண்" போன்ற அவருடைய ஓவியங்கள், அவரது ஒப்பற்ற படைப்புகளாகும்.  

மைக்கேல் ஆஞ்சலோ[ கி.பி. 1475 - கி.பி. 1564].

  • இவரும்  ஓர் ஓவியர், சிற்பி, கட்டடக் கலைஞர் மற்றும் ஒரு கவிஞர். அவர் உருவாக்கிய சலவைக்கல் சிற்பமான டேவிட்சிலை, ஒரு மாபெரும் கொலையாளியின் இளமை ததும்பும் வலிமையையும், ஆற்றலையும்  கொண்ட சலவைக்கல் சிற்பமான டேவிட் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.

ரஃபேல் [கி.பி.1483 - கி.பி.1520]

  • அழகு நிறைந்த‘மடோன்னா’ (கன்னிப்பெண்ணும் குழந்தையும்) சித்திரத்தைத் தீட்டியவர். அவர் தீட்டிய மற்றோர் ஓவியமான ‘தி ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்பது ஆன்மீகத்துக்கும், மனிதநேயத்துக்குமிடையே  அவர் வாழ்ந்தகாலங்களில் நிலவிய தத்துவார்த்த விவாதத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வரையப்பட்டுள்ளது .
Similar questions