. மத சீர்திருத்தம்
அ). மார்ட்டின் லூதர் தேவாலயத்தை ஏன் எதிர்த்தார்?
ஆ) ‘நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்’ என்ற கொள்கை குறித்து எழுது.
இ) எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் திருச்சபையை ஏன் நிறுவினார்?
ஈ) இக்னேஷியஸ் லயோலாவின் பங்களிப்பு குறித்து எழுதுக.
Answers
Answered by
0
மத சீர்திருத்தம்
மார்ட்டின் லூதர் தேவாலயத்தை எதிர்த்தார்
- திருச்சபையின் ஆடம்பர வாழ்க்கை, திருச்சபை பதவிகள் ஏலம், பாவமன்னிப்புச்சீட்டு விற்பனை திருச்சபையின் ஊழல்கள் மார்டின் லூதரின் எதிர்ப்புக்கான காரணங்கள்
'நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்' என்ற கொள்கை குறித்து எழுதுக
- சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை நிராகரித்து, முழுமையான நம்பிக்கையினால் மட்டுமே ஆன்ம விடுதலை பெற முடியும் என வாதிட்டார்,
- இதுவே 'நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்' கொள்கையாகும்.
எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் திருச்சபையை ஏன் நிறுவினார்?
- இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி தனக்குப்பின் முடி சூட்டிக் கொள்ள ஒரு மகன் வேண்டி மறு திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
- மனைவி கேத்ரினுடனான திருமணத்தை ரத்து செய்ய போப்பிடம் விண்ணப்பித்தார்.
- போப்பிடமிருந்து அனுமதி கிடைக்காததால் பொறுமை இழந்த எட்டாம் ஹென்றி அரசாணைகள் மூலம் 'ஆங்கிலிக்கன் திருச்சபையை ' நிறுவினார்.
- இக்னேஷயஸ் லயோலா கிறிஸ்தவ மத பரப்பிற்காக இயேசு சபையை நிறுவினார்.
- கல்வி நிலையங்கள் , அனாதை இல்லங்கள் , உறைவிடங்கள் போன்றவற்றை தொடங்கினார்.
Answered by
29
Explanation:
மார்ட்டின் லூதர் தேவாலயத்தை எதிர்த்தார்
Similar questions