Social Sciences, asked by Atom2888, 10 months ago

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர்

ஆவார்.

அ) முதலாம் இன்னசென்ட் ஆ) ஹில்ட்பிராண்டு
இ) முதலாம் லியோ ஈ) போன்டியஸ் பிலாத்து

Answers

Answered by shruti202068
1

Explanation:

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளரும் தருகின்ற முக்கிய தகவல்களுள் ஒன்று இயேசுவின் சாவைப் பற்றியதாகும்[1].

பாலசுத்தீன நாட்டில் உரோமையரின் சார்பில் ஆளுநராக இருந்தார் பொந்தியு பிலாத்து. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கொலையுண்டார். இத்தகவல்களைத் தருகின்ற நற்செய்தி நூல்களில் காணப்படும் பிற செய்திகள் இவை:

இயேசுவைப் பின்சென்ற சீடர்களில் ஒருவராகிய யூதாசு இசுகாரியோத்துவும், இயேசுவுக்கு எதிரிகளாக மாறிவிட்ட தலைமைக் குருக்கள், மூப்பர்கள், மற்றும் மறைநூல் அறிஞர்கள் ஆகியோரும் ஒத்துழைத்துச் செயல்பட்டதால்தான் இயேசு கைதியாகப் பிடிக்கப்பட்டார்.

யூதத் தலைவர்களும் உரோமையர் பெயரால் ஆட்சிசெய்த ஆளுநர் பிலாத்துவும் இயேசுவைத் தம் எதிரியாகக் கருதியதற்கு அடிப்படையான காரணம் என்னவென்பது பற்றி சரியான தெளிவில்லை.

hope it helps you! plz follow me up and mark it as brainliest ....

Answered by steffiaspinno
0

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் போண்டியஸ்பிலாத்து

போண்டியஸ்பிலாத்து

  • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் போண்டியஸ்பிலாத்து என்பவர் ஆவார்.
  • டேவிட் மற்றும் சாலமன் ஆகியோரின் ஆட்சியின்போது ஒரு குறுகிய கால புகழூக்குக் பின், யூத இன மக்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து உச்சகட்ட துயரங்களை அனுபவித்தார்.
  • இயேசு பணம் படைத்தோரையும் ,பேச்சுமாறி செயல்படுவோர்களையும் எதிர்த்தார் .
  • நடைமுறைகளையும் சடங்குகளையும் கண்டனம் செய்தார் .
  • சமய குருமார்கள் இப்போக்கை விரும்பவில்லை என்பதால் அவர்கள். இயேசுவைப் பிடித்து ரோமானிய ஆளுநர். போண்டியஸ்பிலாத்துவிடம் ஒப்படைத்தனர்.
  • ரோமானிய ஆட்சியாளர்கள் இயேசுவை ஒரு அரசியல் கிளர்ச்சியாளராய்க் கருதியதால் அவர் விசாரணை செய்யப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.
Similar questions