சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை
எழுதுக.
Answers
Explanation:
சூழல் மண்டலம் (ecosystem, இலங்கை வழக்கு: சூழற்றொகுதி) என்பது, ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற இயற்பியல் கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் எல்லாத் தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களையும் இணைத்த ஒரு இயற்கை அலகு ஆகும்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிருள்ள இனங்களும், உயிரற்ற இயற்பியல் கூறுகளும், அவற்றிற்கிடையிலான இடைவினைகளும் இணைந்து சூழல் மண்டலம் எனப்படும்.
1930 ஆம் ஆண்டில் ரோய் கிளஃபாம் (Roy Clapham) என்பவர், சூழலின் இயற்பியல் மற்றும் உயிரியல் கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக சூழல் மண்டலம் என்பதற்குச் சரியான ecosystem என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் 1935 இல் ஆர்தர் டான்ஸ்லே (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் சூழலியலாளர், இச் சொல்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் சூழலுக்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் (interactive system) குறிக்கப் பயன்படுத்தினார்.
உயிரினங்கள் அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே சூழல் மண்டலம் என்னும் கருத்துருவின் அடிப்படையாகும். சூழல் மண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு மனிதச் சூழ்நிலைமண்டலமாக விளக்க முடியும்.
HOPE IT HELPS YOU! PLZ MARK IT AS BRAINLIEST.... AND FOLLOW ME UP
சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக;
- சூழ்நிலை மண்டலத்டிதின் செயல்பாடுகடள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன.
- அனைத்து உயிரினங்களும் ஒன்றோடோன்று தொடர்பு கொண்டு ஆற்றல் மாற்றம் உணவு சங்கிலி உணவு வலை ஆகியவற்றை உருவாக்குகின்றன.
ஆற்றல் மட்டம்
- ஆற்றல் மட்டம் பெரும்பாலும் சூ ழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில்
- படிநிலை ஒழுங்கு முறைகளில் நடைபெறுகிறது. இந்நிலைகள ஆற்றல் மட்டம் எனப்படுகிறது.
உணவு சங்கிலி
- உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாக தொடர்ச்சியாக நடைபெறுவதை உணவுச் சங்கிலி என்று அழைக்கிறோம்.
உணவு வலை
- உணவு சங்கிலிகள் ஒன்றினையொன்று சார்ந்து பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை எனப்படுகிறது.