ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்வி்தம் பினைதிரு்ந்தது?
Answers
Answered by
74
ஏறு தழுவுதல் திணைநிலை வாழ்வு
- பண்பாட்டுத் தொன்மையும் இலக்கிய வளமையும் வாய்ந்தது தமிழர் வரலாறு.
- இயற்கையைச் சார்ந்தும் பிற உயிர்களோடு இணைந்தும் வாழ்ந்தனர் சங்க காலத் தமிழர்கள்.
- இதற்குச் சங்க இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன.
- அவற்றுள் ஒன்று ஏறு தழுவுதல் நிகழ்வாகும்.
- சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஏறுதழுவுதல் முல்லை நிலத்தில் வாழும் மக்களின் வாழ்வியல் அடையாளத்துடன் இணைந்து உள்ளது.
- முல்லை நில ஆயர்கள் பங்கேற்கும் ஏறுதழுவுதல் நிகழ்வானது முல்லை திணை மக்களின் வீரத்தினை பறைச்சாற்றும் விதமாக உள்ளது.
- வயலும் வயல் சார்ந்த இடமுமாக உள்ள மருத நிலத்தில் உள்ள மக்களின் வாழ்வோடு உழவானது இணைந்து உள்ளது.
- ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் ஏர் மாடுகள், எருதுகள், ஏறுகள் என்று அழைக்கப்பட்டன.
Answered by
15
Answer:
தமிழக உழவர்கள், தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல். அவ்விழாவின்போது, மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடிகயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டுவர். பின்னர் பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர். இதன் தொடர்ச்சியாக வேளாண குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறுதழுவுதலாகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
11 months ago
Science,
1 year ago
Math,
1 year ago
English,
1 year ago