வியத்தகு அறிவியல விரவிக் கிடக்கும் நிகலயில அகழாய்வின் தேவை குறித்த உங்களது
கருததுகள்
Answers
வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் வகையில் அகழாய்வின் தேவை
- மண்ணைத் தோண்டி ஆராய்ச்சி செய்வதால் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளைப் பற்றி அறிய இயலும்.
- ஆய்வுக்குழுவினர் ஆய்விடத்திலுள்ள மண்ணை மிக பொறுமையுடனும், மிகவும் நுட்பமாகவும் சிறுகச் சிறுகத் தோண்டிச் சிதையாமல் தடயங்களைத் திரட்டுவர்.
- இதனால் பல்வேறு காலங்களில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள் ஒவ்வொரு மண்ணடுக்குகளில் கிடைப்பதுண்டு.
- இதன் அடிப்படையில் முன்னோர்களின் வரலாற்றை நாம் எளிதில் அறிந்து கொள்ள இயலும்.
- கடந்த காலத்தை அறிந்து கொள்வதால் நிகழ்காலத்தை நம்மால் செம்மைப்படுத்தி கொள்ள முடியும்.
- முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், வாணிபம், பண்பாடு என அனைத்து பற்றியும் அறிய உதவும் பாடமாக இந்த தொல்லியல் ஆய்வுகள் உள்ளன.
Explanation;
அறிவியல் மிகவும் வேகமானது. ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து அதுவே சில ஆண்டுகளில் மாற்றம் அடைந்து முன்னது காணாமல் போய்விடுகின்றது.
கணினியை வைரஸ் அழித்து விடும். ஆனால், மண்ணாலும், கல்லாலும் ஆன பழம் பொருட்களை எந்த வைரஸூம் கூட அழிக்க முடியாது.
if as neduvina u can ans this
நெடு வினா
வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க
முன்னுரை:-
நமது பண்பாட்டை எண்ணிப் பார்பதற்கும் கடந்த காலத்தைப் புரிந்து கொள்வதற்கும் துணை நிறபவை அகழாய்வுகள்.
அரிக்கமேடு அகழாய்வு:-
அரிக்கமேடு அகழாய்வில் பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் காணப்பட்ட தொட்டிகளில் சாயம் தோய்க்கப் பட்டிருந்ததாகத் தெரிகின்றது.
அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.
அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வாணிபத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரிக்கமேடு அகழாய்வு:-
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது பழம்பெரும் பழங்கால அடையாளமாக உள்ளன.
கீழடி அகழாய்வு:-
மதுரை அருகே கீழடி என்னும் இடத்தடில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருட்கள், உலோகப் பொருட்கள், முத்துக்கள், கிளிஞ்சல் பொருள்கள், மான் கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு – கறுப்புப் பானைகள், சதுரங்க்காய்கள், தானியங்களைச் சேமித்து வைக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், உறைக்கிணறுகள் போன்ற தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன.
இவை 2300 ஆண்களுக்கு முற்பட்டவை என கருதப்படுகின்றன. இதுவரை கிடைத்த அகழாய்வில் இறப்பு தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளன.
ஆனால் கீழடியில் வாழ்விடப்பகுதிகளே முழுமையான அளவில் கிடைத்துள்ளன. செங்கல் கட்டுமானங்கள் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் காட்டும் சாட்சிகளாக அமைந்துள்ளன.
முடிவுரை:-
தமிழகர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகள் ஆவணங்களாகத் திகழ்கின்றன.