கூவல்"" என்று அழைக்கப்படுவது எது?
Answers
Answered by
105
கூவல்
- கூவல் என்று அழைக்கப்படுவது கிணறு ஆகும்.
- நம் நாட்டில் செம்மண், சரளை மண், உவர்மண், வண்டல் மண், பாலை மண் என பலவகை மண்ணில் மக்கள் வாழ்ந்தனர்.
- அவர்களின் நீர்த் தேவைக்காக பூமிக்கு அடியிலிருந்து நீர் எடுப்பதற்காக மண்ணை வெட்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழி கிணறு எனப்பட்டது.
- இந்த கிணறானது அது தோண்டப்படும் இடத்தைப் பொறுத்து பலப் பெயரில் அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு
- ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு.
- உரைக்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணறு.
- கேணி – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு.
- பூட்டை கிணறு – கமலை நீர்ப்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு,
- இதுபோல் கூவல் என்பது நீர்த்தேவைக்காக உவர்மண் நிலத்திலிருந்து தோண்டி அமைக்கப்படும் ஓர் நீர்நிலை ஆகும்.
Answered by
29
Answer:
கூவல் என்று அழைக்கப்படுவது கிணறு ஆகும்..
Explanation:
....
Similar questions