பாரதிதாசன் குறிப்பு வரைக?
Answers
Answered by
28
பாரதிதாசன் குறிப்பு வரைக
- பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
- இவர் 1891 ஆம் ஆண்டு புதுவையில் தந்தை கனகசபைக்கும், தாய் இலக்குமிக்கும் மகனாகப் பிறந்தார்.
- பாரதியின் மீது கொண்ட பற்றினால் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
- பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு. இருண்ட வீடு, குடும்ப விளக்கு. தமிழியக்கம், பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் , பிசிராந்தையார் நாடகம் ஆகிய நூல்களை பாரதிதாசன் படைத்துள்ளார்.
- இருபதாம் நூற்றாண்டில் புரட்சி மிகு புதுமைக் கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது பாரதிதாசன் கவிதைகள்
- ஒரு குடும்பத்தின் ஒளி விளக்காக திகழும் பெண்ணால் தான் ஒளிமிக்க குடும்பத்தை உருவாக்க இயலும் என்பது பாரதிதாசனின் விழிப்புணர்வான கருத்து ஆகும்.
- பாவேந்தர், புரட்சிக் கவிஞர் ஆகிய சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
Similar questions