India Languages, asked by GautamPrabhu4978, 10 months ago

மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் மதுரை மாநகரின் சிறப்பை எவ்வாறு பாடுகிறார்?

Answers

Answered by rithanya13
0

Answer:

sorry u won't get the answer for this language here

Answered by steffiaspinno
0

மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் மதுரை மாநகரின் சிறப்பை பாடுகிறார்

  • மதுரை மாநகரில் ஆழமான தெளிந்த நீரையுடைய அகழி உள்ளது.
  • பல கற்களைக் கொண்டு கட்டப்பட்டமதில் வானளவு உயர்ந்துள்ளது.
  • பழைமையானதும் வலிமை மிக்கதும் தெய்வத்தன்மை பொருந்தியதுமாகிய வாயில் உள்ளது.  
  • அவ்வாயில் நெய் பூசியதால் கருமையடைந்த வலிமையான கதவுகளை உடையது.
  • மேகங்கள் உலாவும் மலைபோல் மாளிகைகள் உயர்ந்து உள்ளன.
  • இடைவிடாது ஓடுகின்ற வைகை ஆற்றைப் போல மக்கள் எப்போதும் வாயில்கள் வழிச் செல்கின்றனர்.
  • மண்டபம், கூடல், அடுக்குகளை எனப் பல்வேறு பிரிவுகளைக் கொண்டு வான்வரை ஓங்கிய தென்றல்‌ காற்று இசைக்கும் பல சாளரங்களையுடைய நல்ல இல்லங்கள் உள்ளன.
  • ஆறு போன்ற அகலமான நீண்ட தெருக்களில் பொருள்களை வாங்க வந்த மக்கள் பேசும் பல்வேறு மொழிகள் ஒலிக்கின்றன.
  • விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலி போல் ஒலிக்கிறது.
  • இசைக்கருவிகளை இயக்குவதால் உண்டாகும் இசை, நீர்நிலைகளைக் கையால் குடைந்து விளையாடும்‌ தன்மைபோல் எழுகிறது.
  • அதனைக் கேட்ட மக்கள் தெருக்களில் ஆரவாரத்தோடு ஆடுகின்றனர்.
  • பெரிய தெருக்களில் இருக்கும்‌ நாளங்காடியும் அல்லங்காடியும் ஓவியங்கள் போலக் காட்சியளிக்கின்றன.
Similar questions