இலைகளில் உடல் அசைவுகளைஉருவாக்கும் தாவரங்களுக்கு ஓர்எடுத்துக்காட்டு தருக.
Answers
Answered by
0
Answer:
Ask in English broo.......Than I can help u..........
Answered by
0
இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு:
- டெஸ்மோடியம் கைரான்ஸ் என அழைக்கப்படும் இந்திய தந்தி தாவரம் என்ற தாவரத்தில் உள்ள கூட்டிலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்டிருக்கும்.
- நுனியில் ஒரு பெரிய சிற்றிலை மற்றும் பக்கவாட்டில் இரண்டு சிறிய சிற்றிலைகள் எதிர் எதிர் திசையில் காணப்படும்.
- சூரியகாந்தி செடியின் தண்டுப்பகுதி எவ்வாறு சூரியனின் திசையினை நோக்கி நகர்கிறதோ அதுபோல் இதன் சிறிய இரண்டு சிற்றிலைகள் சூரிய ஒளிக்கு ஏற்ப நகரும்.
- இந்த சிறிய இரண்டு சிற்றிலைகள் மேல் நோக்கி நகர்ந்தும், பின்னோக்கி நகர்ந்தும், கீழ் நோக்கி நகர்ந்தும் இறுதியில் சீரிசை அசைவினால் தன் இடத்தை அடையும்.
- இந்த டெஸ்மோடியம் கைரான்ஸ் தாவரமானது நடனமாடும் தாவரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தை தான் இந்திய தாவரவியல் அறிஞரான ஜெகதீஸ் சந்திரபோஸ் தன் ஆய்விற்காக பயன்படுத்தினார்.
Similar questions