பின்வரும் வாக்கியத்தினைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும்திசைக்கு எதிராக இது வளைகிறது.ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், ஆனால் புவிஈர்ப்பு விசையின்திசைக்கு எதிராக இது வளைகிறது.
Answers
Answered by
0
Answer:
sorry I cannot give the answer
Answered by
2
அ) புவிச்சார்பசைவு :
- புவி ஈர்ப்பு விசைக்கு ஏற்றவாறு தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசைவானது புவி நாட்டம் அல்லது புவி சார்பசைவு என அழைக்கப்படுகிறது.
- தாவரத்தின் வேர் பகுதியானது சூரிய ஒளியின் திசையின் எதிர்திசை நோக்கியே வளர்க்கிறது. எனவே வேர்ப் பகுதி எதிர் ஒளிச்சார்பசைவு உடையது.
- மேலும் இது புவிக்கு நேராக கீழ்நோக்கி வளர்வதால் இது நேர் புவிச்சார்பசைவு உடையதாகவும் உள்ளது.
ஆ) ஒளிச்சார்பசைவு :
- ஒளிச்சார்பசைவு என்பது ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்றவாறு தாவரத்தின் பாகத்தில் ஏற்படும் ஒரே திசையில் உள்ள அசைவுதான் ஒளிச்சார்பசைவு ஆகும்.
- தாவரத்தின் தண்டு பகுதியானது ஒளியின் திசையினை நோக்கியே வளர்க்கிறது. எனவே தண்டுப் பகுதி நேர் ஒளிச்சார்பசைவு உடையது.
- தாவரத்தின் தண்டு பகுதியானது புவி ஈர்ப்பு திசைக்கு எதிர்திசை நோக்கியே வளர்க்கிறது. எனவே தண்டுப் பகுதி எதிர் புவிச்சார்பசைவு உடையது.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
Accountancy,
9 months ago
Accountancy,
9 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago