தொகுதி அன்னலிடா பற்றி குறிப்பு வரைக.
Answers
Explanation:
துண்டங்களாலான உடலையுடைய முள்ளந்தண்டிலி விலங்குகளை உள்ளடக்கிய ஒரு விலங்குக் கணமே வளையப்புழு அல்லது அனெலிடா (phylum Annelida) ஆகும். மனிதர்களுக்கு மிகவும் பழக்கமான அனெலிட்டுக்களாக மண்புழு, அட்டை என்பன அமைகின்றன. இவ்விலங்குக் கணத்துக்குள் கிட்டத்தட்ட 17000 இனங்காணப்பட்ட இனங்கள் அடங்குகின்றன. பெரும்பாலான இனங்கள் கடலிலும், சில ஈரலிப்பான மண்ணிலும், நன்னீரிலும் வாழ்கின்றன. ஒரு சில இனங்கள் கடலினடியில் எரிமலைத் துவாரங்களுக்கருகில் ஐதரசன் சல்பைடு வாயு வெளியேறும் இடங்களிலும் வாழ்கின்றன. இவை உண்மையான உடற்குழி (coelom) உடைய, இருபக்கச் சமச்சீரான Triploblastica விலங்குகளாகும். இவற்றில் சிறப்பான இன்னுமொரு இயல்பு துண்டுபட்ட உடலமைப்பாகும். இவற்றில் அனேகமான இனங்கள் மூடிய குருதிச் சுற்றோட்டத்தையும் கொண்டுள்ளன. பழைய முறைப்படி வளையப்புழுக்களின் வாழிடம் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் செயற்கையாக பொலிக்கீட்டா (கடல் வாழ் அனெலிட்டுக்கள்), ஒலிக்கோகீட்டா (மண்புழு போன்ற அனெலிட்டுக்கள்), ஹிருடீனியா (அட்டைகள் போன்றவை) என மூன்று வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டன. எனினும் இது கூர்ப்பியல்புகளைக் காட்டாததால் இப்பாகுபாடு தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. முளையவியலின் அடிப்படையில் அனெலிட்டுக்கள் புரொட்டோஸ்டோம் விலங்குகளாகும். பெரும்பாலான நில வாழ் அனெலிட்டுக்கள் மண்புழுக்களாகும். இவை சுற்றுச்சுருங்கல் அசைவு மூலம் அசைகின்றன. மண்புழுக்கள் இயற்கையியல் ரீதியிலும், பொருளாதார அடிப்படையிலும் மனிதனுக்கு மிகவும் முக்கியமான விலங்குகளாகும். இவை மண்ணுக்குக் காற்றூட்டம் வழங்கி மண்ணை வளப்படுத்துவதன் மூலம் விவசாய அபிவிருத்திக்குப் பங்களிக்கின்றன. மண்புழுக்கள் மண்ணிலுள்ள உக்கலடையும் சேதனப் பொருட்களை உட்கொள்ளுகின்றன
தொகுதி அன்னலிடா:
- மண்புழுக்கள், அட்டைகள் மற்றும் கடல் வாழ் புழுக்கள் அனைத்தும் இத்தொகுதியில் அடங்கும்.
- அன்னலிடா என்ற வார்த்தை “அன்னுலேஷன்ஸ்” (annulations) என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது.
- இவை வளையங்கள் போன்று ஒன்றோடொன்று இணைந்து காணப்படுகின்றன.
- இதற்கு மெட்டாமெரிசம் என்று பெயர். இவற்றிற்கு கால்கள் கிடையாது. இவற்றிற்கு உண்மையான உடற்குழி உண்டு.
- இவைகள் சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன. உடலானது கியூட்டிக்கிள் எனும் ஈரப்பசை மிக்க உறையினால் ஆனது.
- கழிவு நீக்கம் உறுப்பாக நெஃப்ரிடியா செயல்படுகிறது. இவற்றிற்கு நரம்பு மண்டலமே மூளையாகக் செயல்படுகின்றது.
- ட்ராக்கோபோர் லார்வா இவற்றின் பொது லார்வா ஆகும். (எ.கா) மண்புழு , அட்டை