மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும்ஐந்தினைப் பட்டியலிடுக.
Answers
Explanation:
மீன் (fish) என்பது நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு விலங்கு இனம் ஆகும். இவற்றை நான்கு கால்கள் இல்லா முதுகெலும்புள்ள நீர் வாழ் உயிரினம் என்று வரையறை செய்யலாம். மீன்களின் முன்னும் பின்னும் உள்ள புறங்கள் குவிந்த அமைப்புடையவை. இவற்றின் உடலானது தலை, உடல், வால் என மூன்று தனித்தனிப் பகுதிகளைக் கொண்டுள்ளன. இவற்றிற்கு தனியாக கழுத்துப்பகுதி இல்லை. இவை இணைத்துடுப்புகளாலும், நடுமுதுகுத் துடுப்புகளாலும் நீந்திச் செல்கின்றன.
பெரும்பாலான மீன்கள் புறவெப்ப (குளிர்-இரத்த விலங்குகள்) தன்மையுடையன. அதாவது சுற்றுசூழலுக்கு ஏற்ப அவை தங்கள் உடல் வெப்பத்தை மாற்றிக்கொள்ளும். ஆனாலும் வெள்ளை சுறா, சூரை மீன் போன்ற சில பெரிய மீன்களும் அதிக மைய வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றலுடையன.
இவை நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு இனப்பெருக்கம் செய்து வாழும் உயிரினம் ஆகும். பல்வேறு வகையான மீன்கள் நன்னீரிலும், உப்பு நீரிலும் வாழ்கின்றன. மீனின் வகைகள் அளவாலும், நிறத்தாலும், வடிவத்தாலும் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன.
மீன்களின் சிறப்புப் பண்புகள்
மீன்கள்
- மீன்கள் குளிர் இரத்தப் பிராணிகள் மற்றும் நீர் வாழ் முதுகெலும்பிகள் ஆகும்.
- இவற்றின் உடல் படகினைப் போன்று உள்ளது. இது தலை, உடல், வால் என மூன்று பகுதிகளை உடையது. இவற்றிற்கு கழுத்து பகுதி இல்லை.
- மீன்களின் சுவாசம் செவுள்களின் வழியே நடைபெறுகிறது. இவை 5 முதல் 7 இணை செவுள்கள் உள்ளன.
- இவற்றின் இதயம் இரு அறைகளை உடையது.
- உலக அளவில் பரவி உள்ள செயில் மீனானது சிறுத்தினை விட வேகமாக நீந்தக்கூடியது. இந்த மீன் ஆனது மணிக்கு 109 கி.மீ வரை நீந்தக் கூடியது. ஆனால் சிறுத்தை 100 கி.மீ. வரை செல்லக் கூடியது.
- முதுகெலும்பிகளில் மிகப் பெரியது நீலத் திமிங்கலம் ஆகும்.
- நீர் வாழ் உயிரினங்களை வளர்க்கும் முறைக்கு நீர் வாழ் உயிரி வளர்ப்பு எனப்படும்.