.ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல்விதிகளைத் தருக.
Answers
Answered by
0
ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதி.
காந்தப் பாயம்
- காந்தப் பாயம் என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பின் வழியே கடந்து வரும் காந்தப்புலக் கோடுகளின் எண்ணிக்கை ஆகும். இதன் அலகு வெபர் ஆகும்.
காந்தப் பாய அடர்த்தி
- காந்தப் விசைக் கோடுகளுக்குச் செங்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பை கடந்து செல்லும் காந்தவிசைக் கோடுகளின் எண்ணிக்கை ஆனது காந்தப் பாய அடர்த்தி என அழைக்கப்படும்.
ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகள்
- காந்தப்பாயம் மாறும்போது காந்தப்புலத்தில் வைக்கப்பட்ட மின்சுற்றில் ஒரு மின்னியக்கு விசை உருவாகும் எனவும் அந்த மின்னியக்கு விசையின் மதிப்பானது காந்தப்பாய மாறுபாட்டு வீதத்தினை பொறுத்தது ஆகும்.
- இந்த மின்னியக்கு விசை தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ஆகும்.
- ஒரு மூடிய சுற்றுடன் இணைக்கப்பட்ட காந்தப்பாயத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக தூண்டப்பட்ட மின்னியக்கு விசை உருவாகும் நிகழ்வு மின்காந்தத் தூண்டல் ஆகும்.
Similar questions