India Languages, asked by singhsaksham8408, 1 year ago

அயனிச் சேர்மங்களுக்கும் சகப்பிணைப்புச் சேர்மங்களுக்கும் இடையே உ ள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.

Answers

Answered by sanalyadav81
0

Answer:

plss clear ur question dear

Answered by steffiaspinno
0

அயனிச் சேர்மங்கள் :

  • உலோக அணுவிலிருந்து அலோக அணுவிற்கு ஒரு எலக்ட்ரான் இடம்  பெயர்வதால் உருவாகின்றன.
  • நேர் மற்றும் எதிர் அயனிகளுக்கிடையே வலிமையான நிலைமின் கவர்ச்சி விசை உள்ளது.
  • அறை வெப்பநிலையில் திண்மங்கள்  உருகிய நிலையிலும் கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்தும் . உருகுநிலையும், கொதிநிலையும் அதிகம்.
  • முனைவுள்ள கரைப்பான்களில் கரையும் , கடினமானது, நொறுங்கும் தன்மையுடையது.  அயனிகள் வினைகளில் பங்கேற்பதால் வினைகள் உடனடியாகவும், மிக வேகமாகவும் நடைபெறும்.

 சகப்பிணைப்புச் சேர்மங்கள் :

  • அலோக அணுக்களுக்கிடையே எலக்ட்ரான்கள்  பங்கிடப்படுவதால் இவை உருவாகின்றன.
  • அணுக்களுக்கிடையே வலிமை குறைந்த கவர்ச்சி விசையே உள்ளது.
  • இச்சேர்மங்கள் வாயுக்கள், நீர்மங்கள், மென்மையான திண்மங்கள் போன்ற மூன்று நிலைகளிலும் காணப்படுகின்றன.
  • உருகிய நிலையிலும் கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்துவதில்லை.
  • உருகுநிலையும், கொதிநிலையும் குறைவு.
  • முனைவற்ற கரைப்பான்களில் கரையும்.
  • மென்மையானது, மெழுகு தன்மையுடையது.
  • மூலக்கூறுகள் வினைகளில் பங்கேற்பதால் வினையின் வேகம் குறைவு.
Similar questions