India Languages, asked by pothnagari1919, 11 months ago

நமது உடலில் கொழுப்பை சேமிக்கும்திசுவின் பெயர் என்ன?

Answers

Answered by steffiaspinno
0

நமது உடலில் கொழுப்பை சேமிக்கும் திசு

அடிப்போசைட் எனப்படும்  கொழுப்புதிசு

  • கொழுப்பு திசு  என்பது  கொழுப்பு அல்லது  அடிப்போசைட்  செல்களின்  திரட்டலாகும்.
  • இது கொழுப்பு சேமிப்பு  இடமாக பணியாற்றுகிறது.
  • ஒவ்வொரு கொழுப்பு  செல்லும்  கோள அல்லது முட்டை வடிவமுடையது மற்றும் பெரிய கொழுப்பு துளியை கொண்டது.
  • கொழுப்பு செல்கள் சிறிய  வட்ட பிரிவாக அமைந்து கொலஜன் மற்றும் எலாஸ்டின் நார்கள் மூலம் பிரிக்கப்படுகிறது.
  • இவை இதயம் மற்றும் சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகளுக்கு இடையிலும் மற்றும் தோல்களிலும் காணப்படுகிறது.
  • இவை உடல் உறுப்புக்களை  அதன் இடத்தில் இருந்து நிலை நிறுத்துகிறது.
  • சிறுநீரகம் மற்றும் கருவிழிகளில் அதிர்‌ச்சியிலிருந்து   பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுகிறது.
  • இவை பாதுகாப்பு உறைபோல் செயல்படுவதுடன்  உடலின் வெப்ப நிலையை சீராக வை‌க்கிறது.
Similar questions