அதிக அளவு நமது உடலில் காணப்படும்தசை திசுக்களை குறிப்பிடுக. அவற்றின்செயல்பாட்டினை வகுத்துரை.
Answers
Answered by
0
তারল্য করা তবে যে ষষ্ঠ ডন
Answered by
2
அதிக அளவு நமது உடலில் காணப்படும்
தசை திசுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள்
எலும்பு சட்டகத்தசை (வரித்தசை), 2. மென்தசை (வரியற்ற தசை)
1. எலும்பு சட்டகத்தசை (வரித்தசை)
- நம் உடலில் அதிகம் காணப்படுகிறது.
- இவை எலும்புடன் ஒட்டி உடலின் அசைவிற்கு காரணமாக உள்ளதால் இவை எலும்புச் சட்டகத்தசை என்று அழைக்கப்படுகிறது.
- இவை நம் உடலின் உணர்வுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால், இவை தன்னிச்சை தசைகள் என்று அழைக்கப்படுகின்றன.
- இவைகளில் இருண்ட மற்றும் இருளற்ற பட்டைகள் மாறி மாறி காணப்படுவதால் இவை வரித்தசைகள் எனப்படுகிறது.
- எ.கா. கை, கால்களில் காணப்படும் மூட்டுத் தசைகள்
2. மென்தசை (வரியற்ற தசை)
- இத்தசைகள் கதிர் வடிவில் உள்ளது.
- மையப்பகுதி அகன்றும் முனைப் பகுதி சுருங்கியும் உள்ளது.
- இத்தசைகளில் கோடுகள் மற்றும் வரிகள் கிடையாது.
- இவை நம் இச்சைகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதில்லை.
- எனவே இவை இயங்கு தசைகள் என அழைக்கப்படுகிறது.
- எ.கா. இரத்த நாளம், இரப்பை. சுரப்பிகள், சிறுநீர்ப்பை
Similar questions