கூட்டுதிசு என்றால் என்ன? பல்வேறுவகையான கூட்டுதிசுவின் பெயர்களைஎழுது.
Answers
Answered by
1
கூட்டுத்திசு
- ஒன்றுக்கும் மேற்பட்ட பலவகை செல்கள் ஒன்றாக தொகுப்பாக ஒரு பணியைச் செய்கின்றன.
- இவை கூட்டுத் திசுக்கள் எனப்படும்.
கூட்டுத்திசுவின் வகைகள்:
சைலம்
- தாவரங்களில் நீரைக் கடத்தும் திசுவாக பணியாற்றுகிறது.
- டிரக்கீடுகள் மற்றும் குழாய்கள் மூலம் நீரினை வேரிலிருந்து தண்டு பாகத்திற்கு கடத்துகிறது.
புளோயம்
- தாவரங்களில் உணவைக் கடத்தும் பணியினை புளோயம் மேற்கொள்கிறது.
- சல்லடைக் குழாய்கள் மூலம் உணவினை கடத்தும் பணியானது புளோயத்தைச் சாரும்.
சைலம் கூறுகள் :
- சைலம் டிரக்கீடுகள்
- சைலம் நார்கள்
- சைலம் குழாய்கள்
- சைலம் பாரன்கைமா
புளோயம் கூறுகள்
- சல்லடைக் குழாய்கள்
- துணை செல்கள்
- புளோயம் பாரன்கைமா
- புளோயம் நார்கள்
Similar questions