India Languages, asked by sohamjainsoham8850, 9 months ago

சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி________ ஆகும்.

Answers

Answered by steffiaspinno
1

பைலோரஸ்

  • சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி பைலோரஸ் ஆகும்.
  • இரைப்பையானது தசையாலான அகன்ற உறுப்பாகும்.  
  • இது உணவுக் குழலுக்கும் சிறுகுடலுக்குமிடையே ‘J’  வடிவத்தில் காணப்படுகிறது.  
  • இரைப்பை நீரானது இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படுகிறது.
  • இந்த இரைப்பை நீர் நிறமற்றது.
  • மேலும் இது ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை கொண்டுள்ளது.
  • அது அதிக அமிலத் தன்மை உடையது.  
  • இவற்றில் ரென்னின் மற்றும் பெப்சின் என்ற இரு  நொதிகளும் காணப்படுகின்றன.
  • இது செயலற்ற நிலையில் உள்ள பெப்சினோஜனை, செயலாற்றும் பெப்சின் ஆக மாற்றுகிறது.
  • உணவோடு  சேர்த்து விழுங்கப்பட்ட பாக்டீரியாக்களை ஹைட்ரோகுளோரிக் அமிலமானது அழித்துவிடுகிறது.
  • இரைப்பைப்பாகு என்பது இரைப்பையில் சுரக்ககூடிய இரைப்பை நீர் மற்றும் கடையப்பட்ட உணவும் சேர்ந்து, அரை செரிமான நிலையில் உணவு மாறியிருப்பதாகும்.
  • இந்த இரைப்பைப்பாகு சிறுகுடலுக்குள் மெதுவாக குடல்வாய் அல்லது பைலோரஸ் வழியாக செல்கிறது.
Similar questions