India Languages, asked by vikaskadam2866, 11 months ago

ஒலி பரவ ஊடகம் தேவை என்பதை மணிச்சாடி சோதனை கொண்டு விளக்குக

Answers

Answered by Anonymous
0

Answer:

1 kHz க்கும் குறைவான அதிர்வெண்களில் உமிழப்படுவதைப் பொருட்படுத்தாமல் மிகக் குறைந்த இரைச்சல் அளவை அளவிட உயர் உணர்திறன் ஒலிவாங்கிகள் தேவைப்படுகின்றன.

Answered by steffiaspinno
0

ஒலி பரவ ஊடகம் தேவை:

  • ஒலியானது பரவுவதற்க்கு ஊடகம் ஒன்று தேவைப் படுகிறது. இதனை விளக்கும் சோதனை பின்வருமாறு,
  • ஒரு மின்சார மணியை, ஒரு மணிச் சாடியினுள் இணைக்கவும்.
  • அந்த ஜாடியானது ஒரு வெற்றிடமாக்கும் பம்புடன் இணைக்கப்பட்டுள்ளது.  
  • இப்போது மின்சார மணியை ஒலிக்கச் செய்யும் போது நாம் அதன் ஒலியை கேட்க முடிகிறது.
  • வெற்றிடமாக்கும் பம்பின் உதவியுடன் காற்றை சிறிது சிறிதாக வெளியேற்றும் போது மின்சார மணியின் ஒலியின் அளவும் சிறிது சிறிதாக குறையும்.  
  • காற்றை முற்றிலுமாக ஜாடியிலிருந்து வெளியேற்றிய பிறகு மின்சார மணியின் ஒலி நமக்கு கேட்பதில்லை.  
  • காற்றை மீண்டும் ஜாடிக்குள் செலுத்தினால் மணியின் ஒலியை நம்மால் கேட்க முடிகிறது.
  • எனவே ஒலி பரவ ஊடகம் தேவை என்பதை இந்த சோதனையின் மூலம் அறியலாம்.  
Similar questions