India Languages, asked by kdjifjodjoos5765, 11 months ago

மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?

Answers

Answered by steffiaspinno
0

மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள்:

இனப்பெருக்க குளம்:

  • ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்கேற்ற முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்கள் சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றது.  

குஞ்சு பொரிக்கும் குழிகள்:

  • இனப்பெருக்க களங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற  முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன.  

நாற்றங்கால் குளங்கள்:

  • 2 முதல் 7 நாட்களுக்குப் பிறகு இளம் மீன் குஞ்சுகள் 60 நாட்கள்  வரை 2 - 2.5 செ.மீ. அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.  

வளர்க்கும் குளங்கள்:  

  • இளம் மீன்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன.
  • மூன்று மாதம் வரை 10 முதல் 15 செ.மீ நீளமுடைய மீனாக வளரும் வரை இங்கு வளர்க்கப்படுகின்றன.

இருப்புக்குளங்கள்:  

  • விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.  
Similar questions