India Languages, asked by asksavvy4433, 1 year ago

மீன் வளர்ப்பு வகைகள் பற்றி விரிவாக விவரி?

Answers

Answered by steffiaspinno
0

விரிவான மீன் வளர்ப்பு:

  • பரந்த இடங்களில் குறைவான எண்ணிக்கையாலான மீன்களை இயற்கையான முறையில் உணவளித்து வளர்த்தல் ஆகும்.

தீவிர மீன் வளர்ப்பு:

  • மிக குறுகிய இடங்களில் அதிகமான எண்ணிக்கையிலான மீன்களை உற்பத்தி அதிகரிக்கும் நோக்கில் செயற்கையான உணவளித்து வளர்க்கும் முறை.

குளத்தில் மீன் வளர்ப்பு:

  • குளத்திலுள்ள நீரில் மீன்களை வளர்ப்பது.

ஆறுகளில் மீன் வளர்ப்பு:

  • ஓடும் நீரில் மீன்களை வளர்ப்பது.

அணைகளில் மீன் வளர்ப்பு:

  • செயற்கையாக கட்டப்பட்ட நீர்த்தேக்கங்களில் மீன்களை வளர்க்கும் முறையாகும்.

ஏரிகளில் மீன்வளர்ப்பு:

  • இயற்கையான நீர்நிலைகளான ஏரிகளில் மீன்களை வளர்த்தல்.

ஒற்றை வகை மீன் வளர்ப்பு:

  • ஒருவகை மீனை மட்டும் நீர்நிலைகளில் வளர்த்தல்.

பலவகை மீன் வளர்ப்பு:

  • ஒன்றுக்கும் மேற்பட்ட மீன்வகைகளை ஒன்று சேர நீர்நிலைகள் வளர்த்தல்.

ஒருங்கிணந்த மீன் பண்ணை:

  • விவசாயப் பயிர்கள் அல்லது கால்நடை வளர்ப்புப் பண்ணைகள் ஆகியவற்றோடு சேர்த்து மீன்களை வளர்க்கும் முறை.
Similar questions