India Languages, asked by harishgarg6871, 11 months ago

இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?

Answers

Answered by mh5767187
5

Explanation:

இயக்கு தளம் (Operating System) என்பது கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருளாகும். எந்த ஒரு கணினியும் இயங்க ஒரு இயக்கு தள மென்பொருள் இருப்பது இன்றியமையாதது. இயக்கு தளமானது கணினியின் நினைவகத்தின் இடங்களை முறைப்படி பகிர்ந்தளிப்பது, கோப்புகளை சீருறுத்தி பராமரிப்பது, பல்வேறு பணிகளை கட்டுப்படுத்துவது, வரிசைப்படுத்துவது, மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட தரவு உள்ளீடு கருவிகளையும், தரவு வெளியீடு கருவிகளையும் சீராக பணிப்பது, பிற மின்வலை தொடர்புகளை வழிப்படுத்துவது என கணினியின் பல்வேறு அடிப்படையான நிகழ்வுகளை நடுவாக இருந்து இயக்குவதே இயக்கு தளம் என்னும் கருவான மென்பொருளாகும்.

இயக்கு தளத்தின் முக்கிய தொழிற்பாடுகள்:

முறைவழி முகாமைத்துவம்

நினைவக முகாமைத்துவம்

கோப்பு முகாமைத்துவம்

Similar questions