குடியுரிமை என்பதன் பொருள் என்ன?
Answers
குடியுரிமை
- குடியுரிமை என சொல்லப்படும் சிட்டிசன் என்னும் சொல் இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டவையாகும் இவை நகரில் வசிப்பவர் என்பதே இதற்கான பொருளாகும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை இந்திய அரசியலமைப்பு வழங்குகிறது இந்திய அரசியலமைப்பில் பாகம்-2 சட்டப்பிரிவுகள் 5 லிருந்து 11 வரை கூடிய உரிமை பற்றிய விளக்கங்களைத் தருகின்றனர் ஆயிரத்து 55 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது இதன் மூலம் குடியுரிமை பெறும் உரிமை போன்றவற்றை பற்றி இந்த குடியுரிமை சட்டம் விளக்குகிறது
- இந்த குடியுரிமை சட்டம் அரசாங்கத்தால் எட்டுமுறை திருத்தப்பட்டுள்ளது மேலும் இந்த குறி உரிமைச்சட்டம் முதலில் காமன்வெல்த் குடியுரிமையை வழங்கியது பின்னர் 2003 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி இந்த உரிமையானது நீக்கப்பட்டது
குடியுரிமை (citizenship) என்பது, சிறப்பாக ஒரு நாட்டின் குடிமகனாகவோ குடிமகளாகவோ இருப்பதற்கான உரிமையைக் குறிக்கும். இவ்வுரிமையில் அந்நாட்டு அரசியலில் பங்குகொள்ளும் உரிமையும் அடங்கும். குடியுரிமை சமூக ஒப்பந்தக் கொள்கையின் அடிப்படையில் சில பொறுப்புகளையும், கடமைகளையும் குடிமக்களிடத்தில் எதிர்பார்க்கிறது. பல நாடுகளில் குடியுரிமை அற்றவர் அந்நாட்டுத் தேசிய இனத்தவராகக் கருதப்படுவது இல்லை என்பதுடன் அவர் ஒரு வெளியாராகவே கணிக்கப்படுகிறார். ஒரு நாட்டின் குடியுரிமை கொண்டிருப்பவர் அந் நாட்டைச் சாராத தேசிய இனத்தவராகவும் இருக்கக்கூடும். எடுத்துக் காட்டாக, அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர் அமெரிக்கக் குடிமகனாகக் கருதப்பட்டாலும், தேசிய இன அடிப்படையில் அவர் ஒரு இந்தியத் தேசிய இனத்தவராகக் கணிக்கப்படலாம். தேசிய இனம் என்பது, பிறந்த இடம், பெற்றோர், இனம் ஆகியவற்றில் தங்கியிருக்க, குடியுரிமை என்பது ஒரு சட்டம் சார்ந்த தொடர்பாகவே உள்ளது. குடியுரிமை இழக்கப்படவோ பெற்றுக் கொள்ளப்படவோ கூடியது. ஒரு நாட்டில் பிறத்தல், குறிப்பிட்ட நாட்டுக் குடியுரிமை கொண்ட ஒருவரை திருமணம் செய்தல் போன்றவை சில நாடுகளில் ஒருவருக்குக் குடியுரிமையைப் பெற்றுத்தரக்கூடும்.
குடிமகன்(Citizen) என்ற தகுதி, இறையான்மையுள்ள நாட்டின் அரசியல் சட்டத்தால், கடமைகளும் பொறுப்புகளும் ஒரு நபருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாட்டின் குடிமகன் என்ற தகுதி அடைந்தவர்களுக்கு அந்நாட்டில் குடியுரிமை, வாழ்வுரிமை, வாக்குரிமை, வேலை செய்யும் உரிமை, சொத்துக்கள் வாங்கும் உரிமை, தான் வாழும் நாட்டின் அரசிற்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிகாரம், வெளிநாடுகளிடருந்து தன் சொந்த நாட்டிற்கு திரும்பும் உரிமை போன்ற உரிமைகள் கிடைக்கும்.
மேலும் குடிமகன்களுக்கு தன் நாட்டின் சட்ட திட்டங்களை பின்பற்றுதல், வரி செலுத்துதல் மற்றும் கட்டாய இராணுவப் பயிற்சியில் ஈடுபடுதல் போன்ற கடமைகளும் பொறுப்புகள் உள்ளது.