தாமிருந்த கோடு குறைத்து விடல்’- இப்பழமொழியின் பொருள்
அ) தன் வீட்டிலுள்ள சுற்றத்தாரை வெளியேற்றிவிடுதல்.
ஆ) தான் தங்கியிருக்கும் வீட்டின் உயரத்தைக் குறைத்தல்.
இ) தான் தங்கியிருக்கும் கிளையை வெட்டி தானும் வீழ்ந்து உயிர் விடல்.
ஈ) தன் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடல்.
Answers
Answered by
0
தான் தங்கியிருக்கும் கிளையை வெட்டி தானும் வீழ்ந்து உயிர் விடல்
பழமொழி நானூறு
- இதன் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி காணப்படும். இதனை இயற்றியவர் முன்றுறையரையனார் ஆவார்.
தாமிருந்த கோடு குறைத்து விடல்
- தமக்கு உதவிச் செய்தவர்களுக்கு தீங்கு செய்வது தனக்கே தீங்கு செய்து கொள்வதற்கு சமம் ஆகும். இதனை
நாடி நமரென்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல் கிளர்மணி
நீடுகல் வெற்ப நினைப்பின்றித் தாமிருந்த
கோடு குறைத்து விடல் - பழமொழி நானூறு
- சரியான சமயத்தில் தமக்கு உதவியவரை அவரின் பகைவரோடு சேர்ந்து அவருக்கு தீங்கு செய்வது, ஒருவன் தான் அமர்ந்திருக்கும் கிளையை தானே வெட்டி வீழ்த்தி தானும் கீழே விழுந்து உயிர் விடுவதற்கு சமம் ஆகும்.
Similar questions