அன்றாட செயல்களை எவ்வாறு தொடங்கவேண்டும் என ஆசாரக்கோவைப் பாடல் கூறுகிறது?
Answers
Answered by
1
அன்றாட செயல்களை தொடங்குதல்:
- மணிமொழிக்கோவை என்பதில் அமைந்த நூல்கள் நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி மற்றும் ஆசாரக் கோவை ஆகும். இவைகள் பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.
ஆசாரக்கோவை
- ஆசாரக்கோவை = ஆசாரம் + கோவை ஆகும். ஆசாரமாகிய ஒழுக்க விதிகளைக் கோவையாக அமைத்து நூறு வெண்பாக்களால் பாடப்பட்ட நூல் என்பதால் இது ஆசாரக்கோவை என அழைக்கப்படுகிறது.
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதின்
தந்தையுந் தாயுந் தொழுதெழுக என்பதே
முந்தையோர் கண்ட முறை.
இந்த பாடலின் பொருள்
- அதிகாலையில் துயில் எழ வேண்டும். அன்று செய்ய வேண்டிய செயலைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
- தாய் தந்தையரை வணங்க வேண்டும். அதன் பின்னரை அன்றாட செயலை செய்ய தொடங்க வேண்டும்.
Similar questions