புறப்புண் நாணி வடக்கிருந்தோனே - இடஞ்சுட்டி விளக்குக.
Answers
Answered by
0
Answer:
brother I cannot understand your language.
Answered by
2
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே - இடஞ்சுட்டி விளக்குதல்:
இடம்
- புறப்புண் நாணி வடக்கிருந்தோனே என்ற பாடல் வரி வெண்ணிக்குயத்தியார் இயற்றிய புறநானூறு நூலில் உள்ள ஒரு பாடலில் உள்ளது.
பொருள்
- போரில் மார்பில் புண் ஏற்பட்டு இறப்பதே வீரமாக கருதப்பட்டது. போரில் புறம் காட்டி அஞ்சி ஒடுதல் இழுக்காக கருதப்பட்டது.
- அவ்வாறு புறப்புண் ஏற்பட்டதை எண்ணி வருந்தி வடக்கு திசையில் அமர்ந்து உண்ணாமல் உயிர் விடுதலே சிறந்ததாக கருதப்பட்டது.
விளக்கம்
- வெண்ணிக்குயத்தியார் இயற்றிய புறநானூறு நூலில் உள்ள ஒரு பாடலில் வெண்ணிப் பறந்தலையில் நடந்த போரில் பெருஞ்சேரலாதன் கரிகாலனுடன் போரிட்டான்.
- இதில் பெருஞ்சேரலாதனுக்கு புறப்புண் ஏற்பட்டது. இதை இழிவென எண்ணிய பெருஞ்சேரலாதன் அப்போர் களத்திலே உண்ணாமல் வடக்கிருந்து உயிர் நீத்தார்.
Similar questions