காட்சி என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
2
காட்சி :
- திரைப்படத்தின் ஒவ்வொரு நிகழ்வினையும் தனித்தனி காட்சித் துணிப்புகளாக எடுத்து அதனை ஒன்று சேர்த்தே காட்சியாக உருவாக்குகின்றனர்.
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியினை காட்டும் காட்சித் துணிப்புகளின் தொகுப்பானது காட்சி எனப்படுகிறது.
- ஒரு காட்சிக்கான காட்சி துணிப்பானது சட்டகத்தினை பொருத்து ஒன்றோ அல்லது பலவாகவோ இருக்கும்.
காட்சியின் வகைகள்
- காட்சித் துணிப்பு ஆனது அண்மைக் காட்சி, இடைநிலைக் காட்சி, சேய்மைக் காட்சி, முழுக் காட்சி எனப் பல வகையாக பிரிக்கப்படுகிறது.
- அண்மைக் காட்சியினை எடுக்கும் போது தனித்தனி காட்சித் துணிப்புகளாகவும், முழுக் காட்சி மற்றும் சேய்மைக் காட்சி எடுக்கும் போது ஒரே காட்சித் துணிப்பாக இருக்கும்.
Similar questions