புனைவிய இலக்கியத்திற்கும் இயற்பண்பிய இலக்கியத்திற்குமுள்ள வேறுபாடு யாது?
Answers
Answered by
0
Answer:
ما الفرق بين الأدب الخيالي والأدب الفيزيائي؟
Answered by
0
புனைவிய இலக்கியத்திற்கும் இயற்பண்பிய இலக்கியத்திற்குமுள்ள வேறுபாடு :
புனைவிய இலக்கியம்
- கற்பனையின் அளவும், கதை மாந்தரின் பண்புகளை உயர்வாய் கூறும் இலக்கியங்கள் புனைவிய பண்பினை உடையவை.
- இதில் உண்மைத் தன்மையை விட கற்பனைத் தன்மை அதிகமாக உள்ளது.
- (எ.கா) தமிழில் உள்ள காப்பியங்கள் மற்றும் சிற்றியலக்கியங்கள் புனைவியத் தன்மை உடைய இலக்கியங்கள் ஆகும்.
இயற்பண்பிய இலக்கியம்
- கற்பனையின் அளவினை விட்டுவிட்டு நடப்பதை அப்படியே எழுதி கூறுவதும், அதனால் ஏற்படும் திறனாய்வுப் பார்வையும் உள்ள இலக்கியங்கள் இயற்பண்பிய இலக்கியங்கள் ஆகும்.
- இதில் கற்பனைத் தன்மையை விட உண்மைத் தன்மை அதிகமாக உள்ளது.
- (எ.கா) தமிழில் எழுதப்பட்ட பள்ளு வகை இலக்கியங்கள், தனிப்பாடல்கள் தொடங்கி புனைகதைகள் வரை உள்ளவை இயற்பண்பியம் உடைய இலக்கியங்கள் ஆகும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago