திறனாய்வு வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answers
Answered by
0
திறனாய்வு வகைகளை விளக்குதல்:
திறனாய்வு
- ஒரு பாடலை பற்றி இலக்கிய நயம் பாராட்டுதல், அதன் மதிப்புரை எழுதுதல் முதலியனவே திறனாய்வு ஆகும்.
- தற்போது இலக்கிய நூல்களில் திறனாய்வு என்ற சொல்லும், நாளிதழ் போன்ற ஊடகங்களில் விமர்சனம் என்ற வடமொழி சொல்லும் வழங்கப்பட்டு வருகிறது.
திறனாய்வு வகை
- திறனாய்வு செய்வதற்கான வழிமுறையின் அடிப்படையில் அதன் வகை மாறும்.
- திறனாய்வு வகைகளுள் மிக அடிப்படையானவை எனத் தி.சு. நடராசன் தான் எழுதிய திறனாய்வு கலை என்னும் நூலில் குறிப்பிடுவன பாராட்டு முறைத் திறனாய்வு, முடிபு முறைத் திறனாய்வு, விதி முறைத் திறனாய்வு ஆகும்.
- மேலும் செலுத்துநிலை அல்லது படைப்பு வழித் திறனாய்வு, விளக்க முறைத் திறனாய்வு, மதிப்பீட்டு முறை திறனாய்வு, ஒப்பீட்டு முறைத் திறனாய்வு மற்றும் பகுப்பு முறைத் திறனாய்வு ஆகும்.
Similar questions