மார்கோனிதான் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்தி முறையினை இங்குப் பதிவு செய்துகொண்டார்.
௮) இலண்டன் ராயல் குழுமம் ஆ) இங்கிலாந்து அறிவியல் கழகம்
இ) அமெரிக்க அறிவியல் கழகம் ஈ) இந்திய அறிவியல் கழகம்
Answers
Answered by
0
மார்கோனி தான் கண்டுபிடித்த கம்பியில்லாத் தந்தி முறை- இங்கிலாந்து அறிவியல் கழகம்
- வானொலி, தொலைக்காட்சி, இணையம் முதலியன மிகவும் புகழ்பெற்ற மின்னணு ஊடகங்கள் ஆகும். இவற்றுள் வானொலியே முதலில் தோன்றியது.
- இத்தாலி நாட்டு அறிஞர் குலீல்மோ மார்கோனி வானொலியினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார்.
- குலீல்மோ மார்கோனி தன் வீட்டினையே ஆய்வுக் கூடமாக மாற்றினார்.
- நீண்ட நாள் முயற்சிக்கு பிறகே கம்பியில்லாத் தந்தி முறையில் செய்திகளை வெகு தொலைவிற்கு அனுப்பும் முயற்சியல் வெற்றி பெற்றார்.
- இந்த கண்டுபிடிப்பினை இங்கிலாந்து அறிவியல் கழகத்தில் பதிவு செய்தார்.
- 1897 ஆம் ஆண்டு குலீல்மோ மார்கோனி கம்பியில்லா தந்தி சேவை நிறுவனத்தை ஏற்படுத்தினார்.
- மார்கோனி 1800 மைல் தொலைவிற்கு செய்தி அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார். குலீல்மோ மார்கோனி வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
Similar questions